இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு மாநிலங்களவை நியமன உறுப்பினராக அறிவிக்கப்பட்டுள்ளார். இதனை பிரதமர் மோடி ட்விட்டர் மூலம் தெரிவித்துள்ளார். அரை நூற்றாண்டுகளாக தமிழ் திரையுலகில் இசையமைப்பாளராக பணியாற்றுபவர் இளையராஜா. அவர் பல ஆண்டுகள் தமிழ் திரையுலகின் இசைத்துறையில் அரசாட்சி செய்து வந்தார் என்றால் அது மிகையில்லை. அவர் 1000 படங்களுக்கு மேலாக இசையமைத்துள்ளார்.
பாபாசாகேப் அம்பேத்கரையும், பிரதமர் நரேந்திர மோதியையும் ஒப்பிட்டு ‘அம்பேத்கர் அன்ட் மோதி’ என்ற தலைப்பில் புளூகிராஃப்ட் பதிப்பகம் வெளியிட்ட நூலுக்கு இளையராஜா எழுதிய முன்னுரை பரபரப்பாக விவாதிக்கப்பட்டது. அப்போதே இளையராஜாவுக்கு மாநிலங்களவை உறுப்பினர் பதவி வழங்கப்பட வாய்ப்புள்ளதாக பேசப்பட்டது.
“இளையராஜாவின் படைப்பு மேன்மை தலைமுறைகளைக் கடந்து மக்களை மகிழ்வித்திருக்கிறது என மோடி தெரிவித்துள்ளார். அதே அளவுக்கு அவருடைய வாழ்க்கைப் பயணமும் ஊக்கமளிக்கக்கூடியது. அவர் ஒரு சாதாரண குடும்பத்திலிருந்து வளர்ந்து நிறைய சாதித்துள்ளார். அவர் ராஜ்ய சபாவுக்கு வருவதில் மகிழ்ச்சி.” என பிரதமர் மோடி ட்வீட்டில் தெரிவித்துள்ளார்.