பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நிதியமைச்சர் பதவியில் இருந்து விலக வேண்டும் என்று முதலீட்டு ஊக்குவிப்புத்துறை அமைச்சர் தம்மிக்க பெரேரா தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று புதன்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,
அந்நிய செலாவணி நெருக்கடிக்கு தீர்வு காண நிதியமைச்சரிடம் எந்த திட்டமும் இல்லை. நிதியமைச்சர், பொருளாதாரப் பேரழிவை கொண்டு வருவதற்கு திட்டமிடுகின்றார்.
நாட்டுக்கு பணத்தை கொண்டு வரும் திட்டம் எதுவும் பிரதமரிடம் இல்லை. ஆகையால், பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நிதியமைச்சர் பதவியில் இருந்து விலக வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.