சிங்கப்பூர் அதிபர் மற்றும் சபாநாயகருக்கு கொரோனா தொற்று

0
263

சிங்கப்பூர் அதிபர் ஹலிமா யாக்கப்புக்கு (வயது 67) கொரோனா தொற்று பாதிப்பு உறுதியாகி உள்ளது. இதை அவரே தனது ‘பேஸ்புக்’ பக்கத்தில் தெரிவித்துள்ளார். அவருக்கு லேசான அறிகுறிகள் காணப்படுகின்றனவாம். ஏற்கனவே கொரோனா தடுப்பூசிகளை முழுமையாக செலுத்திக்கொண்டு, பூஸ்டர் டோசும் போட்டுக்கொண்ட நிலையில்தான் அவருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது.

சிங்கப்பூர் நாடாளுமன்ற சபாநாயகர் டான் சுவான் ஜின்(53) மற்றும் கலாசாரம், சமூகம், இளைஞர்கள் நல மந்திரி டாங்குக்கும் (52) கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. கடந்த 28 நாட்களில் சிங்கப்பூரில் 1 லட்சத்து 40 ஆயிரத்து 965 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

Previous articleஇத்தாலியில் 70 ஆண்டுகளில் இல்லாத வறட்சி…5 பிராந்தியங்களில் அவசர நிலை பிரகடனம்
Next articleMCOSAA Dinner night