நடிகர் பிரதாப் போத்தன் உடல்நலக்குறைவால் காலமானார்

0
255

மலையாளத்தில் பரதன் இயக்கிய Aaravam படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் திரைத்துறைக்கு அறிமுகமான பிரதாப் போத்தன். அதன் பின் அழியாத கோலங்கள், இளமைக் கோலம், மூடுபனி உள்ளிட்ட ஏராளமான தமிழ் திரைப்படங்களில் நடித்துள்ளார்.

நடிப்பு மட்டுமில்லாமல் இயக்கத்திலும் பிரதாப் போத்தன் கவனம் செலுத்தினார். அந்த வகையில் மீண்டும் ஒரு காதல் கதை என்ற திரைப்படத்தை இயக்கி நடித்தார். அந்த திரைப்படத்தில் ராதிகா அவருக்கு ஜோடியாக நடித்திருந்தார். இதன் பின் 11 திரைப்படங்களை அவர் இயக்கியுள்ளார். அதில் சீவலப்பேரி பாண்டி, வெற்றி விழா, மை டியர் மார்த்தாண்டம், லக்கி மேன் ஆகிய திரைப்படங்கள் முக்கியமானவையாக இடம் பிடித்தன.

தனக்கென ஒரு தனி பாணியை நடிப்பில் பின்பற்றிய பிரதாப் போத்தன் தமிழ், மலையாளம், தெலுங்கு ஆகிய மொழிகளில் சுமார் 100க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்திருக்கிறார். இந்த நிலையில் 69 வயதாகும் பிரதாப் போத்தன் சென்னையில் உள்ள தன்னுடைய இல்லத்தில் உடல்நல குறைவு காரணமாக காலமானார்.

Previous articleஅனைத்து சொத்துக்களையும் நன்கொடையாக வழங்க திட்டமிட்ட பில் கேட்ஸ்
Next articleபிரதமர் மோடியை கொல்ல சதித் திட்டம் – முன்னாள் காவல்துறை அதிகாரிகள் கைது