ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தனது ராஜினாமா கடிதத்தை சற்று முன்னர் கையளித்துள்ளதாக சபாநாயகர் தெரிவித்துள்ளார்.
சற்று முன்னர் ஊடகங்களுக்கு கருத்துரைத்த போதே அவர் குறித்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
அதற்கமைய, இலங்கையின் 08வது ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் ஆட்சி முடிவுக்கு வந்துள்ளது.
இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக கோட்டாபய ராஜபக்ஷவை பதவி விலக கோரி மக்கள் போராட்டம் நடத்தியதை தொடர்ந்து அவர் தனது பதவியை இராஜினாமா செய்ய நேரிட்டமை குறிப்பிடத்தக்கது.