சாலமன் (Solomon) தீவுகளில் சீன இராணுவத்தளம் நிறுவப்படமாட்டாது என்பதில் தமக்கு அதிக நம்பிக்கை இருப்பதாக ஆஸ்திரேலியப் பிரதமர் ஆன்டனி ஆல்பனீசி தெரிவித்துள்ளார்.
பசிபிக் தீவுகள் கருத்தரங்கில் சாலமன் தீவுகள் பிரதமரைச் சந்தித்துப் பேசியபிறகு அவர் ஆஸ்திரேலிய ஊடகங்களிடம் அதனைத் தெரிவித்தார்.
சாலமன் தீவுகளுக்கும் சீனாவுக்கும் இடையே அண்மையில் பாதுகாப்பு உடன்பாடு கையெழுத்தான சூழலில் அல்பனீசியின் கருத்து வெளிவந்துள்ளது.
அந்த உடன்பாடு சாலமன் தீவுகளில் இராணுவத் தளமொன்றை அமைக்கப் பெய்ச்சிங்கிற்கு அனுமதியளிக்கக் கூடுமென்ற அச்சத்தை உருவாக்கியது.
ஆஸ்திரேலியாவின் கிழக்குக் கடலோரப் பகுதியிலிருந்து 2000 கிலோமீட்டருக்கும் குறைவான தொலைவில் சாலமன் தீவு அமைந்துள்ளது.