Newsவேலைவாய்ப்புடன் ஆஸ்திரேலியாவில் குடியேற விரும்புபவர்களுக்கு மகிழ்ச்சியான தகவல்

வேலைவாய்ப்புடன் ஆஸ்திரேலியாவில் குடியேற விரும்புபவர்களுக்கு மகிழ்ச்சியான தகவல்

-

மேற்கு ஆஸ்திரேலியாவிற்கு குடிபெயர ஏதுவாக state nomination-க்கு விண்ணப்பிக்க முடியுமென அம்மாநில அரசாங்கம் தெரிவித்துள்ளது.

ஆஸ்திரேலியாவிலுள்ளவர்கள் மட்டுமல்லாமல், வெளிநாட்டிலுள்ளவர்களும் திறமை அடிப்படையில் ஆஸ்திரேலியாவில் குடியேற இந்த சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது.

2022-23 குடிவரவு திட்டத்தின் கீழ் மேற்கு ஆஸ்திரேலிய state nomination-க்கு ranking system ஊடாக தகுதியுள்ள skilled workers விண்ணப்பிக்க முடியும்.

மேற்கு ஆஸ்திரேலியாவிலிருந்து தாக்கல் செய்யப்படும் விண்ணப்பங்களுக்கு அதிக முன்னுரிமை வழங்கப்படும் எனவும், அதற்கு அடுத்தபடியாக ஆஸ்திரேலியாவின் ஏனைய பகுதிகளிலிருந்து கிடைக்கும் விண்ணப்பங்களுக்கும், அதற்கு அடுத்தபடியாக வெளிநாடுகளிலிருந்து கிடைக்கும் விண்ணப்பங்களுக்கும் முன்னுரிமை கொடுக்கப்படும் எனவும் மேற்கு ஆஸ்திரேலிய அரசு அறிவித்துள்ளது.

General அல்லது Graduate பிரிவுகளின் கீழ் state nomination-க்கு விண்ணப்பிக்க முடியும். இதேவேளை Graduate stream-இன் கீழ் அதிகளவானோர் விண்ணப்பிக்க வசதியாக, மேற்கு ஆஸ்திரேலியாவின் Graduate Occupation List விரிவாக்கப்பட்டு 300க்கும் மேற்பட்ட தொழில்கள் இதில் சேர்க்கப்பட்டுள்ளன.

குறித்த தொழிற்பட்டியல் கீழே தரப்பட்டுள்ள அதேநேரம், இதற்கு எப்படி விண்ணப்பிக்கலாம் என்பது உள்ளிட்ட முழுமையான தகவல்களைப் பெற்றுக்கொள்ள migration.wa.gov.au என்ற இணைப்பிற்கு செல்லவும்

Latest news

முதல் ராக்கெட் ஏவுதலுக்கு தயாராகியுள்ள ஆஸ்திரேலியா

விண்வெளிக்குச் சென்று எலோன் மஸ்க்கின் SpaceX உடன் போட்டியிடத் தொடங்கும் ஆஸ்திரேலிய நிறுவனத்தின் கனவுக்கான நேரம் தொடங்கிவிட்டது. ஆஸ்திரேலிய விண்வெளி மற்றும் உற்பத்தி வரலாற்றில் ஒரு மைல்கல்...

 3 ஆஸ்திரேலிய மாநிலங்களில் நிலவும் வரலாறு காணாத அளவு வறட்சி

இந்த ஆண்டு வரலாறு காணாத வறட்சி ஆஸ்திரேலியாவின் மூன்று மாநிலங்களை பாதித்துள்ளது. இந்த ஆண்டு விக்டோரியா மற்றும் டாஸ்மேனியாவின் சில பகுதிகள் கடுமையான வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ளதாக வானிலை...

வரலாற்றில் முதல் முறையாக லிபரல் கட்சியை வழிநடத்தும் ஒரு பெண்

ஆஸ்திரேலிய வரலாற்றில் லிபரல் கட்சியை வழிநடத்தும் முதல் பெண்மணி என்ற பெருமையை Sussan Ley பெற்றுள்ளார். அதன்படி, ஆங்கஸ் டெய்லரை எதிர்த்து லிபரல் கூட்டணியின் தலைமையை Sussan...

ஆஸ்திரேலியாவில் மருந்துகளின் விலை உயரக்கூடும் என அச்சம்

அமெரிக்காவில் மருந்துகளின் விலையை குறைக்கும் நோக்கில் ஜனாதிபதி ட்ரம்ப் நிர்வாக உத்தரவில் கையெழுத்திடுவதாக அறிவித்ததைத் தொடர்ந்து ஆஸ்திரேலியாவில் மருந்துகளின் விலை உயரக்கூடும் என்ற அச்சம் எழுந்துள்ளது. திங்கட்கிழமை...