Breaking Newsரணிலை விரட்டும் நடவடிக்கையை தீவிரப்படுத்த திட்டம்

ரணிலை விரட்டும் நடவடிக்கையை தீவிரப்படுத்த திட்டம்

-

பதில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை பதவி விலக வேண்டும் என்றும், இல்லையேல் விரட்ட நேரிடும் என்றும் அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் தெரிவித்துள்ளது.

இதன்படி நாளை 19ஆம் திகதியை எதிர்ப்பு தினமாகவும் பிரகடனப்படுத்தப்படவுள்ளதாக அதன் செயற்பாட்டாளர் வசந்த முதலிகே தெரிவித்துள்ளார்.

இந்த விடயம் தொடர்பாக இன்று முதல் தமக்கு அருகில் உள்ள நகரங்களில் எதிர்ப்பு போராட்டங்களில் ஈடுபடுமாறு மக்களை கேட்டுக்கொள்வதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

கோட்டாபய ராஜபக்ஷவை பதவியில் இருந்து நீக்கியது போல பதில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை பதவியில் இருந்து நீக்குவதற்கு தொழிற்சங்கங்களும் வெகுஜன அமைப்புகளும் இணைந்து பாரிய நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

இதன்மூலம் இந்தப் போராட்டத்தையும் வெற்றியுடன் முடிக்க முடியும் என நம்புவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Latest news

சீனாவில் வலம்வரும் புதுவகை பீட்சா

வித்தியாசமான உணவு வகைகள் தயாரிப்பு குறித்த காணொளிகள் இணையத்தில் வெளியாகி அதிகளவில் பகிரப்படும். அவற்றில் சில உணவுகள் வரவேற்பும், சில உணவுகள் கடும் விமர்சனங்களுக்கு உள்ளாகும். அந்த...

ஆஸ்திரேலியாவில் பணிபுரியும் புலம்பெயர்ந்தோருக்கான புதிய சட்டம் குறித்த அறிவிப்பு

ஆஸ்திரேலியாவில் பணியிடங்களில் பணிபுரியும் புலம்பெயர்ந்தோர் தொடர்பாக தற்போதுள்ள சட்டங்கள் குறித்து ஆஸ்திரேலிய உள்துறை அமைச்சகம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி, புலம்பெயர்ந்தோரின் விசா நிலையை கருத்தில் கொண்டு...

ஆஸ்திரேலியாவில் தொடங்கவுள்ள வெப்ப மண்டல சூறாவளி!

ஆஸ்திரேலியாவின் முதல் வெப்ப மண்டல சூறாவளி இந்த வாரம் தொடங்க உள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது . இதன்படி, அவுஸ்திரேலியாவின் வடமேற்கு கடற்பகுதியில் இந்த...

குறைக்கப்படும் TSS விசாவிற்கு தேவையான அனுபவ காலம்!

Temporary Skill Shortage (TSS) விசாவைப் பெறுவதற்குத் தேவையான 2 வருட அனுபவம் நவம்பர் 23, 2024 முதல் ஒரு வருடமாக குறைக்கப்படும் என்று ஆஸ்திரேலிய...

ஆஸ்திரேலிய கிரிக்கெட் வரலாற்றில் நிகழ்ந்த சோகம் – 10 ஆண்டுகள் பூர்த்தி

தலையில் பந்து தாக்கியதில் உயிரிழந்த ஆஸ்திரேலிய டெஸ்ட் கிரிக்கெட் வீரர் பில் ஹியூஸ் இறந்து இன்றுடன் 10 ஆண்டுகள் ஆகிறது. 2014 ஆம் ஆண்டு நியூ சவுத்...

ஆஸ்திரேலியாவில் தொடங்கவுள்ள வெப்ப மண்டல சூறாவளி!

ஆஸ்திரேலியாவின் முதல் வெப்ப மண்டல சூறாவளி இந்த வாரம் தொடங்க உள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது . இதன்படி, அவுஸ்திரேலியாவின் வடமேற்கு கடற்பகுதியில் இந்த...