ஆஸ்திரேலியாவில் கொரோனா நோய்த்தொற்று ஏற்பட்டவர்களில் மருத்துவமனையில் சிகிச்சைபெறச் சேர்க்கப்படுவோரின் எண்ணிக்கை உச்சத்தை நெருங்குகிறது.
ஆஸ்திரேலிய மருத்துவமனைகளில் கொரோனா நோயாளிகள் சுமார் 5,300 பேர் சிகிச்சை பெறுகின்றனர்.
நிலைமை கடுமையாவதைத் தவிர்க்க அதிகாரிகள் மக்களை வீட்டிலிருந்தவாறு வேலைசெய்யும் நடைமுறைக்குத் திரும்பும்படிக் கேட்டுக்கொண்டனர்.
அந்நாட்டில் 3ஆம் முறையாகப் பெரிய அளவில் ஓமக்ரான்வகைக் கோவிட் பரவல் இடம்பெறுகிறது. BA.4, BA.5 ரக ஓமிக்ரோன் கிருமிகள் அதிவேகத்தில் பரவக்கூடியவை.
ஆஸ்திரேலியாவில் கடந்த ஒருவாரத்தில் கொரோனா தொற்று ஏற்பட்டவர்களின் எண்ணிக்கை
300,000ஐத் தாண்டியது.
நேற்று கொரோனா தொற்றுச் சம்பவங்களின் எண்ணிக்கை 50,000ஐ எட்டியது. கடந்த 2 மாதங்களில் இல்லாத அளவில் அது அமைந்தது.