Breaking Newsபெரும்பான்மை வாக்குகளுடன் ஜனாதிபதியானார் ரணில்!

பெரும்பான்மை வாக்குகளுடன் ஜனாதிபதியானார் ரணில்!

-

இலங்கையின் புதிய ஜனாதிபதியாக ரணில் விக்கிரமசிங்க 134 வாக்குகளால் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

நாடாளுமன்ற தேர்தல் முடிவுகளுக்கமைய பதில் பிரதமராக செயற்பட்ட ரணில் விக்ரமசிங்க சற்று முன்னர் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

223 நாடாளுமன்ற உறுப்பினர்கள் இன்றைய தினம் வாக்களித்த நிலையில் பெரும்பான்மை வாக்குகள் பெற்று ரணில் விக்ரமசிங்க வெற்றி பெற்றுள்ளார்.

அவருடன் போட்டியிட்ட அநுர குமார திஸாநாயக்க மற்றும் டலஸ் அழக பெரும ஆகிய இருவரும் தோல்வியடைந்துள்ளனர்.

இதில் ரணில் விக்கிரமசிங்க 134 வாக்குகளை பெற்று வெற்றியீட்டியுள்ளார் . ஏனைய வேட்பாளர்களான டலஸ் அழகப்பெரும 82 வாக்குகளையும் அனுரகுமார திசாநாயக்க 3 வாக்குகளையும் பெற்றுள்ளனர்
நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை அறிமுகப்படுத்தப்பட்டதன் பின்னர், ஜனாதிபதி ஒருவர் நாடாளுமன்ற உறுப்பினர்களின் வாக்குகளின் மூலம் தெரிவுசெய்யப்படும் முதலாவது சந்தர்ப்பம் இதுவாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

Latest news

ஆஸ்திரேலிய சந்தைக்கு வரும் ஒரு புதிய மின்சார கார்

இந்த ஆண்டு ஆஸ்திரேலிய சந்தையில் ஒரு புதிய மின்சார கார் வர உள்ளதாக கூறப்படுகிறது. பொதுமக்களால் மலிவு விலையில் வாங்கக்கூடிய Hatchback ரக கார்கள் சந்தைக்கு வர...

நீண்ட வார இறுதியில் விக்டோரியாவுக்குச் செல்வோருக்கான சிறப்பு அறிவிப்பு

வரவிருக்கும் நீண்ட வார இறுதியில் பயணம் செய்யத் திட்டமிடும் விக்டோரியர்களுக்கு அதிகாரிகள் சிறப்பு பாதுகாப்பு ஆலோசனைகளை வெளியிட்டுள்ளனர். மாநிலத்தின் பல பகுதிகளில் காட்டுத்தீ இன்னும் தீவிரமாக உள்ளது. காட்டுத்தீ...

மீண்டும் இயக்கப்படும் உலகின் மிகப் பெரிய அணுமின் நிலையம்

ஜப்பானில் உள்ள உலகின் மிகப் பெரிய அணுமின் நிலையம் மீண்டும் இயக்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜப்பான் நாட்டில் கடந்த 2011 ஆம் ஆண்டு ஏற்பட்ட நிலநடுக்கம் மற்றும் சுனாமியில்...

ஆஸ்திரேலிய தினத்தைக் கொண்டாட வருபவர்களுக்கான சிறப்பு அறிவிப்பு

வரும் 26 ஆம் திகதி வரும் ஆஸ்திரேலிய தினத்தை முன்னிட்டு, சிட்னி ஓபரா ஹவுஸ் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதியை பலத்த பாதுகாப்பு வளையத்துடன் மூட...

ஆஸ்திரேலிய தினத்தைக் கொண்டாட வருபவர்களுக்கான சிறப்பு அறிவிப்பு

வரும் 26 ஆம் திகதி வரும் ஆஸ்திரேலிய தினத்தை முன்னிட்டு, சிட்னி ஓபரா ஹவுஸ் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதியை பலத்த பாதுகாப்பு வளையத்துடன் மூட...

12 ஆண்டுகளுக்குப் பிறகு முடிவுக்கு வந்த சிட்னி Lockout சட்டங்கள்

சிட்னியின் இரவு நேர பொருளாதாரத்தை கடுமையாக பாதித்த Lockout சட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்ட 12வது ஆண்டு நிறைவையொட்டி, Minns தொழிற்கட்சி அரசாங்கம் அந்தச் சட்டங்கள் முற்றிலுமாக ரத்து...