இலங்கைக்கு உணவு உள்ளிட்ட உதவிப்பொருட்களை அனுப்பி வைத்தது சீனா

0
346

https://www.facebook.com/groups/1238440233362043/?ref=share

இலங்கையில் நிலவி வரும் கடுமையான பொருளாதார நெருக்கடி காரணமாக, அங்கு உணவு, எரிபொருள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இதனால் அங்குள்ள மக்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் இலங்கை அரசை கண்டித்து அந்நாட்டு மக்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் இலங்கைக்கு சீன அரசு உணவு உள்ளிட்ட உதவிப்பொருட்களை விமானம் மூலம் அனுப்பி வைத்துள்ளது. இது பொருளாதார நெருக்கடியில் தவித்து வரும் இலங்கையின் பள்ளிக்கூட உணவு திட்டத்திற்கு உதவிகரமாக இருக்கும் என சீனா தெரிவித்துள்ளது. இந்த உதவி பொருட்களை இலங்கை கல்வி அமைச்சகத்திடம் அந்நாட்டில் உள்ள சீன தூதரக அதிகாரிகல் ஒப்படைத்தனர். இந்த உதவியின் மூலமாக இலங்கையில் உள்ள 11 லட்சம் குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து மிக்க உணவு கிடைக்கும் என்றும், இலங்கைக்கு 10 ஆயிரம் டன் உணவுப்பொருட்களை வழங்கும் திட்டத்தின் ஒரு பகுதியாக இந்த உதவி வழங்கப்பட்டுள்ளதாகவும் சீனா தெரிவித்துள்ளது.

Previous article“கொரோனா பாதித்தவர்களுக்கு மறதி உள்ளிட்ட நீண்ட கால பாதிப்புகள் ஏற்படலாம்”
Next articleசீனா வங்கியில் பணம் எடுக்க பொதுமக்களுக்கு தடை