Breaking Newsஇலங்கையின் புதிய பிரதமரான தினேஷ் குணவர்தன!

இலங்கையின் புதிய பிரதமரான தினேஷ் குணவர்தன!

-

இலங்கையின் புதிய பிரதமராக தினேஷ் குணவர்தன பதவியேற்றுள்ளார்.

சற்று முன்னர் பிரதமர் அலுவலகத்தில் வைத்து ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முன்னிலையில் அவர் பதவியேற்றுள்ளார்.

இந்த நிலையில், இலங்கையின் 15 ஆவது பிரதமர் தினேஷ் குணவர்தன என்பதும் குறிப்பிடத்தக்கது.

1949 பிறந்த பிரதமர் தினேஸ் குணவர்தனவுக்கு வயது 73 ஆகும், இவர் கொழும்பு ரோயல் கல்லூரியில் கல்வி பயின்றதுடன், சர்வதேச ரீதியில் வெளிநாட்டு பொருளாதார சிறப்பு பட்டங்களை பெற்றவர் ஆவார்.

1973 ஆம் ஆண்டு அரசியலுக்கு பிரவேசித்த இவர், இது வரையில், கல்வி அமைச்சர், வெளிவிவகார அமைச்சர், நீர்பாசனம் உள்ளிட்ட மிக முக்கிய அமைச்சு பதவிகளை வகித்துள்ளார்.

அத்துடன், தற்போதைய நாடாளுமன்றத்தின் சபை முதல்வராகவும் தினேஸ் குணவர்தன செயற்பட்டு வந்தமை குறிப்பிடத்தக்கது.

Latest news

2025 இல் பிறந்த ஆஸ்திரேலியாவின் முதல் குழந்தை

புத்தாண்டு விடியலுடன், ஆஸ்திரேலியாவின் புதிய பீட்டா தலைமுறையின் முதல் பிறப்பு ஜனவரி 1 ஆம் திகதி நள்ளிரவு 12.05 மணிக்கு பிறந்துள்ளது. இந்த புத்தாண்டுக்குப் பிறகு NSW...

NSW மாளிகையில் மோதிய Ferrari கார்

Ferrari கார் ஒன்று டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது. நியூ சவுத் வேல்ஸில் உள்ள Watsons Bay மாளிகைக்கு அருகில் நேற்று பிற்பகல் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதுடன்...

டிரம்பின் ஹோட்டல் முன் வெடித்த Musk-இன் கார்

அமெரிக்காவின் நெவாடாவில் உள்ள லாஸ் வேகாஸ் நகரில் உள்ள டொனால்ட் டிரம்ப்புக்கு சொந்தமான ஹோட்டலுக்கு வெளியே எரிபொருள் கேனிஸ்டர்கள் மற்றும் பட்டாசு மோட்டார்கள் நிரப்பப்பட்ட டெஸ்லா...

ஆயுளை 20 நிமிடங்கள் குறைக்கும் ஒரு சிகரெட்!

புத்தாண்டில் புகைபிடிப்பதை விட்டுவிட நீங்கள் தயாரானால், உங்கள் ஆயுட்காலம் நீட்டிக்கப்படலாம் என்று சமீபத்திய ஆய்வு உறுதிப்படுத்தியுள்ளது . பிரித்தானிய ஆய்வுக் குழு ஒன்று இந்த ஆய்வை நடத்தி,...

ஒரு வருடத்தில் மெல்பேர்ண் வாடகை விலைகள் மாறியுள்ள விதம்

2024ல் முக்கிய நகரங்களில் வாடகை வீடுகளின் விலை எப்படி குறைந்துள்ளது என்பது குறித்து புதிய அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அறிக்கைகளின்படி, மெல்போர்னில் வாடகை வீட்டு மதிப்புகள் மூன்று சதவீதமும்,...

புத்தாண்டு தினத்தன்று உலகையே அதிர வைத்த தாக்குதலில் பலி எண்ணிக்கை அதிகரிப்பு

அமெரிக்காவின் நியூ ஓர்லியன்ஸில் வாகனம் ஒன்று மக்கள் கூட்டத்தின் மீது செலுத்தியதில் 15 பேர் உயிரிழந்தனர் மற்றும் 30 பேர் காயமடைந்துள்ளதாக BBC செய்தி சேவை...