ஆஸ்திரேலியாவில் நேற்று முன்தினம் வானம் இளஞ்சிவப்பு நிறமாக காட்சியளித்தது.
ஆஸ்திரேலியாவில் உள்ள மில்துரா நகரத்தில் நேற்று முன்தினம் வானம் இளஞ்சிவப்பு நிறமாக காட்சியளித்தது.
இதனை பார்த்த அந்த பகுதி மக்கள் அதிர்ச்சியும் ஆச்சரியமும் அடைந்தனர். இது தொடர்பாக படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
வானம் திடீரென இளஞ்சிவப்பு நிறமாக காட்சியளித்ததற்கு ஏலியன்கள் தான் காரணம் என்றும், சிலர் அமானுஷ்ய நாடகத் தொடரில் வருவது போல் உள்ளது என பலவிதமாக கருத்து தெரிவித்து வந்தனர்.
இந்த நிலையில், இந்த இளஞ்சிவப்பு ஒளியானது அந்த பகுதியில் செயல்பட்டு வரும் கேன் குழுமத்திற்கு சொந்தமான கஞ்சா பண்ணையில் இருந்து வந்ததாக அந்த பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் தெரிவித்தனர்.
மேலும், கஞ்சா செடிகள் வளர்வதற்கு பல்வேறு வகையான ஒளி தேவைப்படுவதாகவும். குறிப்பாக செடி துளிர்விடும் போதும், பூக்கும் பருவத்திலும் இது போன்ற இளஞ்சிவப்பு விளக்குகள் பயன்படுத்தப்படும் என தெரிவித்தனர்.