இங்கிலாந்தில் சட்டவிரோத அகதிகள் உடனடியாக வெளியேற்றப்படுவார்கள் – பிரதமர் வேட்பாளர்கள் இருவரும் ஒரே வாக்குறுதி

0
329

இங்கிலாந்தில் அடுத்த பிரதமர் யார் என்ற தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது. இங்கிலாந்து பிரதமர் தேர்தலில் வெளியுறவுத்துறை முன்னாள் மந்திரி ரிஷி சுனக் மற்றும் வெளியுறவுத்துறை செயலாளர் லிஸ்ட் டிரஸ் ஆகிய இருவரும் போட்டியிடுகின்றனர். இந்நிலையில் அவர்கள் அளித்துள்ள தேர்தல் வாக்குறுதியில், வெளிநாடுகளில் இருந்து வந்து இங்கிலாந்தில் சட்டவிரோதமாக தங்கி இருக்கும் அகதிகள் உடனடியாக வெளியேற்றப்படுவார்கள் என்று உறுதி அளித்துள்ளனர். சட்ட விரோதமாக தங்கி இருப்போர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், அவர்கள் ருவாண்டா நாட்டிற்கு திருப்பி அனுப்பி வைக்கப்படுவார்கள் என்று தெரிவித்துள்ளனர். ரிஷி சுனக் கூறும் போது, நான் பிரதமராகி 100 நாட்களுக்குள் இந்த விவகாரத்தில் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தார். பிற நாடுகளில் இருந்து வந்து இங்கே சட்டவிரோதமாக தங்கி இருப்பவர்கள் அந்தந்த நாடுகளுக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள். அதை அந்நாடுகள் நிராகரித்தால் அவர்களுக்கான உதவிகள் மற்றும் விசா உள்ளிட்ட விவகாரத்தில் நடவடிக்கைகள் எடுக்க தயங்க மாட்டோம் என்றார். லிஸ்ட் டிரஸ் கூறும் போது, ருவாண்டா போல மேலும் பிற நாடுகளுடன் கூட்டணி அமைத்து நாட்டின் எல்லைப்புற பாதுகாப்புக்கு முக்கியத்துவம் அளித்து மேம்படுத்தப்படும் என்று கூறினார்

Previous articleஉக்ரைன் ராணுவ வீரர்களுடன் ஆயுத பயிற்சியில் ஈடுபட்ட போரிஸ் ஜான்சன்
Next articleகோத்தபாய ராஜபக்சே அரேபியாவில் தஞ்சமடைய இருப்பதாக தகவல்