
தமிழ்மொழி கற்றல் வளர்ச்சிக்குழுவின் ஏற்பாட்டில் பாலர் பள்ளிகளுக்குரிய கலந்தாய்வரங்கத்தின் தொடக்கவிழா, ஜூலை 23-இல் இனிதே நடைபெற்றது. அதில் சிறப்பு விருந்தினராக முனைவர் டி. சந்துரு ‘மாடர்ன் மாண்டிசோரி’ குழுமத்தின் தலைவர், தமிழ்மொழி கற்றல் வளர்ச்சிக்குழுவின் துணைத் தலைவர் கலந்துகொண்டார். அர்த்தமுள்ள விளையாட்டு; தரமான கருத்துப்பரிமாற்றம் முதலியவற்றின்வழியே தமிழ்மொழி கற்றல் கற்பித்தல் என்னும் தலைப்பையொட்டி முனைவர் காவேரி முதன்மை உரையாற்றினார். பாலர் பள்ளிப் பிள்ளைகளுக்கு ஆர்வமூட்டும் வகையில் தமிழ்மொழியைத் கற்பிப்பதற்கான உத்திமுறைகள் பலவற்றைத் துறைசார் வல்லுநர்களும் பாலர் பள்ளித் தமிழாசிரியர்களும் பகிர்ந்துகொண்டுள்ளனர். இவற்றை www.tlpss.moe.edu.sg என்னும் இணையத்தளத்தில்வழியே கல்வியாளர்களும் பெற்றோர்களும் பார்த்தும் கேட்டும் பயனடையலாம்.


