விரைவில் வெளியாகிறது பொன்னியின் செல்வன் முதல் பாடல்

0
451

பொன்னியின் செல்வன் படத்திலிருந்து முதல் பாடல் விரைவில் வெளியாகவுள்ளது. இது தொடர்பான மேக்கிங் வீடியோவை வெளியிட்டு படக்குழுவினர் சுவாரசியத்தை ஏற்படுத்தியுள்ளனர்.இந்தாண்டின் மிகவும் எதிர்பார்க்கப்படும் படங்களில் ஒன்றான பொன்னியின் செல்வன் படத்தின் முதல் பாகம் செப்டம்பர் 30ம் தேதி வெளியாகவுள்ளது. இதுதொடர்பாக படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

வரலாற்று படம் என்பதாலும், இசை ஏ.ஆர். ரகுமான் என்பதாலும் பாடல்கள் எப்படி இருக்கும் என்கிற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகம் காணப்படுகிறது. டீசரின்போது வெளியான பின்னணி இசை மிகவும் சிறப்பாக உள்ளதென ஃபேன்ஸ் கமென்ட் செய்துள்ளனர்.இந்த படத்திற்காக பழங்கால இசைக்கருவிகளை ஆய்வு செய்து அதனை ஏ.ஆர். ரகுமான் படத்தில் பயன்படுத்தியதாக தகவல்கள் கூறுகின்றன.இந்த நிலையில், முதல் பாடல் விரைவில் வெளியாகும் என்ற அறிவிப்பை படத்தின் தயாரிப்பு நிறுவனமான மணிரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸ் வெளியிட்டுள்ளது.

அறிவிப்பு வீடியோவில் பாடல் உருவாக்கப் பணிகளில் ஏ.ஆர்.ரகுமான் பிஸியாக காட்சி அளிக்கிறார். உடன் ட்ரம்ஸ் சிவமணி இசை பணிகளை மேற்கொள்ள, அவற்றை படத்தின் இயக்குனர் மணி ரத்னம் பார்வையிடும் வகையில் வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. என்றைக்கு முதல் பாடல் வெளியாகும் என்கிற அறிவிப்பு இன்னும் ஓரிரு தினங்களில் வெளியாகலாம்.பொன்னியின் செல்வன் படத்தில் ஆதித்த கரிகாலனாக விக்ரம், வந்திய தேவனாக கார்த்தி, ராஜராஜ சோழனாக ஜெயம் ரவி, குந்தவையாக த்ரிஷா, நந்தினியாக ஐஷ்வர்யா ராய் உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர்.

Previous articleதமிழில் உறுதிமொழியேற்று எம்.பி.யாக பொறுப்பேற்றுக் கொண்ட இளையராஜா
Next articleஇந்தியாவின் 15-வது குடியரசுத் தலைவராக பதவியேற்றார் திரவுபதி முர்மு