Breaking Newsஆஸ்திரேலியா விசா பெற விண்ணப்பித்தவர்களுக்கு வெளியான தகவல்!

ஆஸ்திரேலியா விசா பெற விண்ணப்பித்தவர்களுக்கு வெளியான தகவல்!

-

ஆஸ்திரேலியாவில் நிலுவையில் உள்ள விசா விண்ணப்பங்களை அவசரமாக பரிசீலிக்கும் பணியை அரசாங்கம் தொடங்கியுள்ளது.

குடிவரவு, குடியுரிமை மற்றும் பல்கலாச்சார விவகார அமைச்சர் ஆன்ட்ரூ கில்ஸ், அந்த நோக்கத்திற்காக அதிக பணியாளர்களை நியமிக்குமாறு உள்துறை அமைச்சகத்திற்கு அறிவுறுத்தியுள்ளார்.

சுமார் 10 லட்சம் ஆஸ்திரேலிய விசா விண்ணப்பங்கள் பரிசீலனைக்காக குவிந்துள்ளதாக கூறப்படுகிறது. மாணவர்-சுற்றுலா மற்றும் பயிற்சி விசாக்களுக்கான விண்ணப்பங்களுக்கு முன்னுரிமை அளிக்க உள்துறை அமைச்சகம் முடிவு செய்துள்ளது.

கடந்த மாத தொடக்கத்தில் இருந்து, நாட்டிற்கு வெளியே அனுப்பப்பட்ட 645,000 விண்ணப்பங்கள் உட்பட 745,000 விசா விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு முடிக்கப்பட்டுள்ளன.

இதில் 388,000 சுற்றுலா விசாக்கள், 62,000 மாணவர் விசாக்கள் மற்றும் 9,550 தற்காலிக பயிற்சி விசாக்கள் அடங்கும்.

அதிகளவான மக்கள் ஆஸ்திரேலியாவிற்கு வந்து நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு பங்களிக்க முடியும் எனவும், தொழிலாளர் பற்றாக்குறையை பூர்த்தி செய்ய உதவ முடியும் எனவும் குடிவரவு அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எவ்வாறாயினும், குவிந்துள்ள விண்ணப்பங்களை கருத்தில் கொண்டு, ஒரே இரவில் குறிப்பிடத்தக்க குறைப்பை செய்ய முடியாது என்று குடிவரவு அமைச்சர் ஆண்ட்ரூ கில்ஸ் வலியுறுத்துகிறார்.

Latest news

Harvard உடன் கல்விசார் தொடர்புகள் துண்டிப்பு – Pentagon அறிவிப்பு

அமெரிக்காவின் மிகவும் பழமையான மற்றும் புகழ்பெற்ற கல்வி நிறுவனமான Harvard பல்கலைக்கழகத்துடனான அனைத்து கல்விசார் தொடர்புகளையும் துண்டிப்பதாக அமெரிக்க பாதுகாப்புத் துறையான Pentagon அறிவித்துள்ளது. Harvard பல்கலைக்கழகம்...

ஆஸ்திரேலியாவில் Boot-ஐ திறந்து வைத்துக்கொண்டு வாகனம் ஓட்டுவது சட்டவிரோதமா?

ஆஸ்திரேலியாவில் பலர் ஷாப்பிங் சென்று பெரிய பொருட்களைக் கொண்டு வரும்போது தங்கள் வாகனத்தின் பின்புறத்தை (Boot) முழுமையாக மூட முடியாத சூழ்நிலைகளை எதிர்கொள்கின்றனர். இருப்பினும், ஆஸ்திரேலியாவில் Boot-ஐ...

சட்டவிரோத மின்-பைக்குகளுக்கு எதிராக ஒரு மாநிலம் கடுமையான நடவடிக்கை

சட்டவிரோத மின்-பைக் பயன்பாடு மற்றும் சமூக விரோத ஓட்டுநர் நடத்தையை கட்டுப்படுத்த புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த நியூ சவுத் வேல்ஸ் அரசு திட்டமிட்டுள்ளது. புதிய விதிகளின் கீழ்,...

மே மாத பட்ஜெட்டில் வரி மாற்றங்கள் குறித்து முடிவு

மே மாதம் சமர்ப்பிக்கப்படும் மத்திய பட்ஜெட், பொருளாதார வளர்ச்சியை விரைவுபடுத்துவதிலும் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவதிலும் கவனம் செலுத்தும் என்று பொருளாளர் ஜிம் சால்மர்ஸ் கூறுகிறார். அதற்காக, பட்ஜெட்டில் உற்பத்தித்திறனை...

சட்டவிரோத மின்-பைக்குகளுக்கு எதிராக ஒரு மாநிலம் கடுமையான நடவடிக்கை

சட்டவிரோத மின்-பைக் பயன்பாடு மற்றும் சமூக விரோத ஓட்டுநர் நடத்தையை கட்டுப்படுத்த புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த நியூ சவுத் வேல்ஸ் அரசு திட்டமிட்டுள்ளது. புதிய விதிகளின் கீழ்,...

இன்று சிட்னிக்கு பலத்த பாதுகாப்பு – 3,500 காவல்துறை அதிகாரிகள்

இஸ்ரேலிய ஜனாதிபதி ஐசக் ஹெர்சாக்கின் அரசுமுறை வருகையையொட்டி திங்கள்கிழமை முதல் சிட்னி முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்த நோக்கத்திற்காக சுமார் 3,500 காவல்துறை அதிகாரிகள்...