சிறிலங்கா அமைச்சின் செயலாளர் பதவிகளில் இருந்து ஓய்வுநிலை இராணுவ அதிகாரிகள் நீக்கப்பட்டு அவர்களின் இடத்துக்கு புதியவர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக கொழும்பு செய்திகள் தெரிவிக்கின்றன.
முன்னாள் அரச தலைவரான கோட்டாபய ராஜபக்சவினால் பல இராணுவ அதிகாரிகள் அமைச்சின் செயலாளர்களாக நியமிக்கப்பட்டு இருந்தனர். அவர்களில் பலரை தற்போது அரச தலைவர் ரணில் விக்கிரமசிங்க நீக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பாதுகாப்பு அமைச்சின் செயலாளராக முன்னாள் இராணுவத் தளபதி கமால் குணரட்ன தொடர்ந்தும் பதவி வகித்து வருகின்றார்.
இந்நிலையில் பல இராணுவ அதிகாரிகளை நீக்கி புதியவர்கள் பலர் நியமிக்கப்பட்டுள்ளதாக அரச தலைவர் ரணிலின் செயலாளர் சமன் ஏக்கநாயக்கவினால் வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளதாக கொழும்பு செய்திகள் மேலும் தெரிவிக்கின்றன.