இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு மேலும் 14 நாட்கள் தங்கியிருக்க சிங்கப்பூர் அனுமதி வழங்கியுள்ளது.
இரண்டு வாரங்களுக்கு முன்பு கோட்டாபய ராஜபக்ஷ தனிப்பட்ட விஜயமாக சிங்கப்பூர் சென்றபோது வழங்கப்பட்ட குறுகிய கால பயண அனுமதி (short term visit pass) 14 நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
பாரிய எதிர்ப்பு போராட்டங்களையடுத்து கடந்த 13 ஆம் திகதி இலங்கையை விட்டு முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ வெளியேறி, கடந்த 14 ஆம் திகதி மாலைதீவு வழியாக சிங்கப்பூர் சென்றடைந்தார்.
முன்னாள் ஜனாதிபதிக்கு தனிப்பட்ட விஜயமொன்றை மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும், அவர் புகலிடம் கோரவில்லை அல்லது வழங்கப்படவில்லை எனவும் சிங்கப்பூர் வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
தி ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸின் முந்தைய அறிக்கையில், சிங்கப்பூரின் குடிவரவு திணைக்களம், கோட்டாபய ராஜபக்ஷவுக்கு 14 நாள் குறுகிய கால பயண அனுமதி (STVP) வழங்கப்பட்டதை உறுதிப்படுத்தியது.