மகிந்த ராஜபட்சே,பசில் ராஜபட்சே இலங்கையை விட்டு வெளியேற தடை

0
422

இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி சூழலுக்கு இடையே அங்கு அரசியல் குழப்பங்களும் இருந்து வருகின்றன. தற்போது புதிய அதிபராக ரணில் விக்ரமசிங்சே பதவியேற்றுள்ளார். இலங்கையின் பிரதமராக தினேஷ் குணவர்தன தேர்வாகியுள்ளார். இந்நிலையில், இலங்கையின் முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபட்ச, முன்னாள் நிதி மந்திரியும் மகிந்த ராஜபடசேவின் சகோதரருமான பசில் ராஜபட்சே ஆகிய இருவரும் இலங்கையை விட்டு வெளியேற இலங்கை சுப்ரீம் கோர்ட்டு தடை விதித்திருந்தது. இந்நிலையில் இன்று நடைபெற்ற வழக்கின் விசாரணையில் தடையை ஆகஸ்ட் 2 ஆம் தேதி வரை நீட்டித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Previous articleஇங்கிலாந்து பிரதமர் வேட்பாளர்களுக்கு சீனா எச்சரிக்கை
Next articleமரண அறிவித்தல் – சோமசுந்தரம் தில்லைநடராஜன்