பொன்னியின் செல்வன் முதல் பாடல் ரிலீஸ் தேதி அறிவிப்பு

0
369

ஏ.ஆர்.ரகுமான் இசையில் உருவாகியுள்ள பொன்னியின் செல்வன் படத்தின் முதல் பாடல் ரிலீசாகும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.இதுதொடர்பாக வந்தியத் தேவன் கார்த்தியின் ஃபோட்டோவுடன் படக்குழுவினர் வெளியிட்டுள்ள போஸ்டர், ரசிக்கும்படியாக உள்ளது.இந்திய சினிமாவின் முன்னணி இயக்குனர் மணி ரத்னத்தின் கனவுப் படமான பொன்னியின் செல்வன் 2 பாகங்களாக வெளிவரவுள்ளது. முதல் பாகத்தை செப்டம்பர் 30ம் தேதி வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். ஏற்கனவே பல சினிமா ஜாம்பவான்கள் படமாக எடுக்க முயற்சி செய்து தோல்வியை தழுவிய நிலையில், மணி ரத்னம் இந்த சவாலில் வெற்றி பெற்றிருக்கிறார்.

சமீபத்தில் வெளியான படத்தின் டீசர் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்க செய்துள்ளது. அடுத்ததாக படத்திலிருந்து முதல் பாடலை வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டிருந்தனர். இதுதொடர்பான அறிவிப்புகள் கடந்த சில நாட்களாக வெளிவந்த நிலையில், 31-ம்தேதி ஞாயிறன்று முதல் பாடலாக ‘பொன்னி நதி’ வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.இதுதொடர்பாக வந்தியத் தேவன் கார்த்தி போஸ்டரை வெளியிட்டுள்ள படக்குழுவினர், வந்தியத் தேவனுடன் ஆடித் திருநாள் கொண்டாட்டம் என்று பதிவிட்டுள்ளனர். படத்தில் ஆதித்த கரிகாலனாக விக்ரம், வந்திய தேவனாக கார்த்தி, பொன்னியின் செல்வனாக ஜெயம் ரவி, குந்தவையாக த்ரிஷா, நந்தினியாக ஐஷ்வர்யா ராய் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

Previous articleஉலகம் முழுவதும் கொரோனா தொற்று பாதித்தவர்கள் எண்ணிக்கை 57.80 கோடியாக அதிகரிப்பு
Next articleவிமானத்தில் கைது செய்யப்பட்டவர் ஆஸ்திரேலியாவில் இருந்து நாடுகடத்தப்பட்டவரா?