Newsவெளிநாட்டுக் கடனால் கப்பல் கட்டும் ஒப்பந்தத்தையும் இழந்த இலங்கை!

வெளிநாட்டுக் கடனால் கப்பல் கட்டும் ஒப்பந்தத்தையும் இழந்த இலங்கை!

-

சிறிலங்கா அரசாங்கம் தனது வெளிநாட்டுக் கடனைத் திருப்பிச் செலுத்தத் தவறியதை அடுத்து, கப்பல் கட்டும் ஒப்பந்தத்தை இழந்ததாக Colombo Dockyard நிறுவனம் அறிவித்துள்ளதாக கொழும்பு செய்திகள் தெரிவிக்கின்றன.

கொழும்பு கப்பல்துறையானது ஜப்பானில் உள்ள ஒனோமிச்சி கப்பல்துறையின் ஒரு அலகாக செயற்படுகின்றது.

எவ்வாறாயினும், வெளிநாட்டுக் கடனை செலுத்தத் தவறிய நிலையில் நோர்வே அரசாங்கம் வழங்கிய இரண்டு கப்பல்களை நிர்மாணிப்பதற்கான ஒப்பந்தத்தை இரத்து செய்ய சிறிலங்கா அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

இந்த இரண்டு செயற்பாட்டு ஆதரவு கப்பல்களை (CSOV) உருவாக்குவதற்கான ஒப்பந்தம் நோர்வேயின் எடா விண்ட் ஏஎஸ் நிறுவனத்திற்கு வழங்கப்பட்டது.

நாட்டில் நிலவும் உறுதியற்ற பொருளாதார மற்றும் நிதி நிலைமை காரணமாகவே இந்த தீர்மானத்தை எட்ட வேண்டியிருந்தது என்று கொழும்பு கப்பல்துறை சுட்டிக்காட்டியுள்ளது.

எவ்வாறாயினும், நோர்வே ஒப்பந்தம் இரத்து செய்யப்பட்டாலும், ஐரோப்பிய மற்றும் ஸ்கண்டிநேவிய நாடுகளுக்கான ஏழு கப்பல் கட்டும் திட்டங்கள் தடையின்றி மேற்கொள்ளப்படும் என்று தெரிவிக்கப்படுவதாக கொழும்பு செய்திகள் மேலும் தெரிவிக்கின்றன.

Latest news

பிரித்தானியாவின் உயரிய ‘நைட்’ பட்டம் பெற்றார் ஈழத்தமிழர்

பிரித்தானியாவின் லெய்செஸ்டர் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராகப் பணியாற்றி வரும், இலங்கையைப் பிறப்பிடமாகக் கொண்ட பேராசிரியர் நிஷான் கனகராஜா பிரித்தானிய மன்னரின் 2026-ஆம் ஆண்டிற்கான புத்தாண்டு கௌரவப் பட்டியலில்...

மெக்சிகோவில் பயணிகள் ரயில் தடம் புரள்வு – 13 பேர் பலி

தெற்கு மெக்சிகோவில் பயணிகள் ரயில் தடம் புரண்டதில் குறைந்தது 13 பேர் இறந்துள்ளனர் மற்றும் கிட்டத்தட்ட 100 பேர் காயமடைந்துள்ளனர் என்று வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. ஓக்ஸாகா...

சீனாவில் குழந்தைகளின் வீட்டுப்பாடங்களை கண்காணிக்கும் AI

சீனாவில் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளின் வீட்டுப்பாடங்களைக் கண்காணிக்க செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவது அதிகரித்து வருவதாகக் கூறப்படுகிறது. ByteDance உருவாக்கிய AI சாட்பாட் "டோலா", குழந்தைகளின் நடத்தையைக்...

மின்சாரக் கட்டணத்தைக் குறைப்பதற்கான வழியை வெளிப்படுத்தும் நுகர்வோர் ஆணையம்

கூடுதல் பணத்தை மிச்சப்படுத்த ஆஸ்திரேலியர்கள் எரிசக்தி சப்ளையர்களை மாற்றுமாறு எச்சரிக்கப்படுகிறார்கள். தேசியத் தலைவர் டேவிட் லிட்டில்பிரவுட், எரிசக்தி விலைகள் குறித்து கவனம் செலுத்தப்பட வேண்டும் என்றும், எரிசக்தி...

மெல்பேர்ணில் ஒரு இரவு விடுதிக்கு அருகில் கத்திக்குத்து தாக்குதல்

மெல்பேர்ணில் உள்ள ஒரு பிரபலமான இரவு விடுதிக்கு அருகில் 35 வயது நபர் ஒருவர் கத்தியால் குத்தப்பட்டுள்ளார். நேற்று இரவு சுமார் 10 மணியளவில் பிரஹ்ரானில் உள்ள...