Newsஆஸ்திரேலியாவுக்குள் நுழைய முயன்ற 46 பேர் திருப்பி அனுப்பப்பட்டனர்

ஆஸ்திரேலியாவுக்குள் நுழைய முயன்ற 46 பேர் திருப்பி அனுப்பப்பட்டனர்

-

கடல் மார்க்கமாக ஆஸ்திரேலியாவுக்குச் செல்ல முற்பட்ட 46 இலங்கையர்கள் மீண்டும் நாட்டிற்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.

இது ஆஸ்திரேலிய எல்லைப் படை கப்பலான ஓஷன் ஷீல்டில் மூலம் வந்துள்ளனர்.

வாழைச்சேனை, மட்டக்களப்பு, பாசிக்குடா, அம்பாறை, பிபில மற்றும் மூதூர் ஆகிய பகுதிகளில் வசிப்பவர்கள் எனவும் 17 வயதுக்கும் 49 வயதுக்கும் இடைப்பட்டவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக அவர்களை ஆஸ்திரேலிய எல்லைப் படையினர் கொழும்பு துறைமுகத்தில் உள்ள குடிவரவு குடியகல்வு திணைக்கள அலுவலகத்தில் ஒப்படைத்துள்ளதாக கடற்படை அறிவித்துள்ளது.

இதேவேளை, இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் சட்டவிரோத குடியேற்றத்தை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளின் மூலம் கடல் மார்க்கமாக வெளிநாடுகளுக்கு சட்டவிரோதமாக குடியேற முயற்சித்த 1024 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.

அவர்கள் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக பரிந்துரைக்கப்பட்டுள்ளனர். 2022 ஆம் ஆண்டு வரை கடல் மார்க்கமாக ஆஸ்திரேலியாவிற்கு சட்டவிரோதமான முறையில் குடியேற முயற்சித்த 183 இலங்கையர்கள் அவுஸ்திரேலிய எல்லைப் படையினரால் கைது செய்யப்பட்டு மீண்டும் இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டுள்ளதாகவும் இலங்கை கடற்படை அறிவித்துள்ளது.

Latest news

சீன BYDகளால் நிரம்பியுள்ள ஆஸ்திரேலிய கிடங்குகள்

ஆஸ்திரேலியாவிற்கு இறக்குமதி செய்யப்பட்ட பிரபலமான சீன மின்சார காரான BYD வாகனங்கள், விற்பனை இல்லாததால் கிடங்குகளில் விடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அரசாங்கத்தால் வழங்கப்படவுள்ள புதிய வாகனத் திறன் தரநிலை...

இரண்டு வருடங்களில் வீட்டு விலைகள் வேகமாக உயரக் காரணம் இதுதான்!

அரசாங்கத்தின் முதல் வீடு வாங்கும் வைப்பு உத்தரவாதத் திட்டத்தின் காரணமாக, ஆஸ்திரேலியா முழுவதும் வீட்டு விலைகள் இரண்டு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வேகமாக உயர்ந்துள்ளதாக புதிய...

ஆஸ்திரேலியர்களுக்கு 3 மணி நேரம் இலவச மின்சாரம்

புதிய எரிசக்தி திட்டத்தின் கீழ் ஆஸ்திரேலியர்களுக்கு ஒரு நாளைக்கு மூன்று மணிநேரம் இலவச சூரிய சக்தி மின்சாரம் வழங்கப்படும் என்று அரசாங்கம் அறிவித்துள்ளது. “Solar Sharer” என்று...

ஆஸ்திரேலிய சுற்றுலாப் பயணிகளை எச்சரிக்கும் “கல்மேகி”

தென்கிழக்கு ஆசியாவில் வீசும் "Kalmaegi" என்ற வெப்பமண்டல சூறாவளி குறித்து ஆஸ்திரேலிய வெளியுறவுத் துறை ஆஸ்திரேலிய சுற்றுலாப் பயணிகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்தப் புயல் வியட்நாம், கம்போடியா...