Newsஇலங்கையில் அவசரகால சட்டம்: எச்சரிக்கும் ஐநா மனித உரிமைகள் பேரவை

இலங்கையில் அவசரகால சட்டம்: எச்சரிக்கும் ஐநா மனித உரிமைகள் பேரவை

-

அமைதியான போராட்டக்காரர்களை ஒடுக்குவதற்கும், அவர்கள் தங்கள் குறைகளை கூறுவதை தடுப்பதற்கும் அவசரகாலச் சட்டத்தை மீண்டும் மீண்டும் பயன்படுத்துவதை ஐநா மனித உரிமைகள் பேரவை கண்டித்துள்ளது.

ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் நிபுணர்கள் அறிக்கையொன்றில் இதனை சுட்டிக்காட்டியுள்ளனர்.

இலங்கை அதிகாரிகள் ஏப்ரல் 2ஆம் திகதி முதல் தடவையாக அவசரகால நிலையை பிரகடனப்படுத்தியதாக அதில் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

கடந்த ஜூலை 15ஆம் திகதி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பதவி விலகியதன் பின்னர், ஜூலை 17ஆம் திகதி மீண்டும் அவசரகாலச் சட்டம் பிரகடனப்படுத்தப்பட்டு, ஜூலை 27ஆம் திகதி பாராளுமன்றத்தின் அனுமதியைப் பெற்று மேலும் ஒரு மாத காலத்திற்கு நீடிக்கப்பட்டுள்ளதாக மனித உரிமைகள் பேரவை சுட்டிக்காட்டியுள்ளது.

அந்த நடவடிக்கைகள் தொடர்பில் இலங்கை அரசாங்கம் மீது பல தடவைகள் கவலை தெரிவித்த போதிலும் அது பலனளிக்கவில்லை என ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் நிபுணர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

மனித உரிமைகள் பேரவையானது அமைதியான முறையில் ஒன்றுகூடல் மற்றும் கருத்து தெரிவிப்பதற்கான உரிமையை சட்டரீதியாக பயன்படுத்துவதை மீறும் வகையில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை மேலும் கண்டிக்கிறது.

Latest news

குயின்ஸ்லாந்தில் தீப்பிடித்து எரிந்த வீடு – 3 குழந்தைகள் உட்பட 4 பேர் பலி

மத்திய குயின்ஸ்லாந்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் மூன்று குழந்தைகளும் ஒரு ஆணும் உயிரிழந்துள்ளனர். நேற்று காலை Emerald-இல் உள்ள Opal தெருவில் உள்ள ஒரு duplex-இல்...

Medical இல்லாமல் புதுப்பிக்கப்பட்ட 17,000 டிஜிட்டல் உரிமங்கள்

டிஜிட்டல் ஓட்டுநர் உரிமம் புதுப்பித்தல் அமைப்பில் உள்ள ஒரு அடிப்படைக் குறைபாட்டின் காரணமாக, குயின்ஸ்லாந்தில் சுமார் 17,000 ஓட்டுநர்கள் மருத்துவச் சான்றிதழ் இல்லாமலேயே தங்கள் ஓட்டுநர்...

NSW-வில் மூடப்படும் பல சட்டவிரோத புகையிலை கடைகள்

சிட்னியின் St Leonards-இல் சட்டவிரோத புகையிலை பொருட்களை விற்பனை செய்த பல வேப் கடைகளை NSW அரசாங்கம் மூடியுள்ளது. புகையிலை பொருட்கள் தொடர்பான சட்டங்களை மீறி உரிமம்...

வீட்டிலிருந்து வேலை செய்தால் வரிச் சலுகைகள் கிடைக்குமா?

வீட்டிலிருந்து வேலை செய்யும் ஆஸ்திரேலியர்கள் ஆயிரக்கணக்கான டாலர்கள் வரி விலக்குகளைப் பெற தகுதியுடையவர்களாக இருக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. விக்டோரியாவின் ஊரடங்கு காலத்தில் தனது வீட்டில் ஒரு அறையை...