முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ வேறு நாட்டில் நிரந்தரமாக தஞ்சம் அடையும் வரை தாய்லாந்தில் தற்காலிகமாக தங்கியிருப்பார் என தாய்லாந்து பிரதமர் Prayut Chan-o-cha அறிவித்துள்ளார்.
இதேவேளை, சிங்கப்பூரில் தங்கியுள்ள முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இன்று தாய்லாந்து செல்லவுள்ளதாக வெளிநாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் தாய்லாந்து அரசாங்கத்திற்கு விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைய குறித்த அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இலங்கையில் ஏழு தசாப்தங்களுக்கு பின்னர் ஏற்பட்ட மோசமான பொருளாதார நெருக்கடி காரணமாக கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் ராஜபக்ஷ குடும்பத்தினருக்கு எதிராக கடும் போராட்டங்கள் வெடித்ததுடன் கடந்த ஜூலை 9 ஆம் திகதி போராட்டகாரர்கள் ஜனாதிபதி மாளிகையை முற்றுகையிட்டனர்.
முன்னாள் ஜனாதிபதி இதனை அடுத்து 2 நாட்களில் மாலைதீவு சென்றதுடன் அங்கிருந்து ஜூலை 14 ஆம் திகதி சிங்கப்பூர் சென்றார்.
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச அங்கிருந்து தனது பதவி விலகல் கடிதத்தை அனுப்பி வைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.