விக்டோரியா – நியூ சவுத் வேல்ஸ் மாநில எல்லைக்கு அருகே துப்பாக்கி முனையில் கொள்ளை சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
அந்த பகுதியில் உள்ள கடை ஊழியர் ஒருவர் ஒருவரிடம் துப்பாக்கி முனையில் கொள்ளையடித்த இரண்டு சந்தேக நபர்களை கைது செய்வதற்கு பொதுமக்களின் உதவியை பொலிஸார் கோரியுள்ளனர்.
இச்சம்பவம் கடந்த திங்கட்கிழமை இரவு 09.15 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
இது தொடர்பான காட்சிகள் சிசிடிவி கேமராக்களில் பதிவாகி ஊடகங்களில் வெளியாகியுள்ளது.
சந்தேகநபர்கள் இருவர் ஐரோப்பிய தோற்றம் கொண்டவர்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சந்தேக நபர்கள் தொடர்பில் ஏதேனும் தகவல் தெரிந்தால் பொலிஸாருக்கு தெரிவிக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


