விசா சேவைகளை வழங்குவதாக கூறி, குடிவரவு வழக்கறிஞராக நடித்து மெல்பேர்ன் மக்களிடம் 80,000 டொலர் மோசடி செய்த பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
48 வயதான அவருக்கு விக்டோரியா இடம்பெயர்வு சேவைகளை இயக்க சரியான உரிமம் இல்லை மற்றும் பதிவு செய்யப்பட்ட இடம்பெயர்வு முகவராக அல்லது வழக்குரைஞராக ஒருபோதும் பணியாற்றவில்லை.
2016 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் முதல் 2017ஆம் ஆண்டு மே மாதத்திற்கு இடையில், இந்த பெண் ஆஸ்திரேலிய விசா வழங்குவதாகக் கூறி 04 பேரிடம் 80,000 டொலர் மோசடி செய்துள்ளார்.
குற்றச்சாட்டில் சிக்கிய பெண் இந்தியாவுக்கு தப்பிச் செல்ல முயன்றபோது மெல்போர்ன் விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார்.
சந்தேகநபர் இன்று நீதிமன்றில் குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளதுடன், எதிர்வரும் ஒக்டோபர் மாதம் தண்டனை வழங்கப்படவுள்ளது.