சீனாவின் இராணுவ கப்பல்கள் ஹம்பாந்தோட்டையிலிருந்து வெளியேற்றவேண்டும்.
அவ்வாறு செய்யாது போனால், அந்த நாட்டின் மக்கள் விடுதலை இராணுவம் முக்கியமான கப்பல் பாதைகள் மற்றும் பாரசீக வளைகுடாவிற்கு அருகில் மூலோபாயமான இடத்தில் காலூன்றிவிடும் என்று அமெரிக்க ஆய்வாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இந்த செய்தியை வோசிங்டன் போஸ்ட் வெளியிட்டுள்ளது. ஹம்பாந்தோட்டை துறைமுகத்துக்கு வரும் சீன கடற்படை கப்பல் ஆயுதமற்ற நிலையிலேயே இருப்பதாக கூறப்படுகிறது. அதன் பயணப் பாதை இன்னமும் தெரியவில்லை.
எனினும் தற்போது கப்பலை எப்போது நிறுத்துவது என்பது குறித்து இலங்கை அதிகாரிகள் சீன அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர் என்று இலங்கை வெளியுறவு அமைச்சகத்தின் அதிகாரி ஒருவரை கோடிட்டு வோசிங்டன் போஸ்ட் செய்தி வெளியிட்டுள்ளது
கடந்த ஒரு வாரமாக, 730 அடி நீளமுள்ள இந்த சீன செயற்கைக்கோள் கண்காணிப்புக் கப்பல், காரணமாக இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையில் அரசியல் இழுபறி ஏற்பட்டுள்ளதாக வோசிங்டன் போஸ்ட் தெரிவித்துள்ளது.
இதேவேளை அண்மைய ஆண்டுகளில், வோஷிங்டனும் புது டெல்லியும் சீனாவை எதிர்க்கும் நோக்கில் இந்தியப் பெருங்கடலில் தங்கள் இராணுவ ஒத்துழைப்பை வலுப்படுத்தியுள்ளன.
இதன் ஒரு கட்டமாக கடந்த வாரம், பழுதுபார்ப்பதற்காக அமெரிக்காவின் கடற்படை கப்பல் ஒன்றுக்கு சென்னை துறைமுகத்தில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இதுவே இந்திய துறைமுகம் ஒன்றில் அமெரிக்க கடற்படை கப்பல் ஒன்று பழுதுபார்ப்பதற்காக அனுமதிக்க முதல்தடவை என்றும் வோசிங்டன் போஸ்ட் குறிப்பிட்டுள்ளது.