Newsதாய்லாந்தில் அறையை விட்டு வெளி வர முடியாத பரிதாப நிலையில் கோட்டாபய

தாய்லாந்தில் அறையை விட்டு வெளி வர முடியாத பரிதாப நிலையில் கோட்டாபய

-

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தங்கியுள்ள ஹோட்டல் அறையை விட்டு வெளியேற வேண்டாம் என தாய்லாந்து பாதுகாப்பு தரப்பினர் அறிவித்துள்ளனர்.

தற்போதுள்ள பாதுகாப்பு நிலவரத்தின் அடிப்படையில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

கிட்டத்தட்ட ஒரு மாத காலமாக சிங்கப்பூரில் தங்கியிருந்த கோட்டாபய ராஜபக்ஷ மேலும் மூன்று பேருடன் சிங்கப்பூர் விமானம் மூலம் தாய்லாந்து வந்தடைந்தார்.

குறித்த விமானம் தாய்லாந்தின் ஃபூகெட் விமான நிலையத்தில் தரையிறங்குவதற்கு திட்டமிடப்பட்டிருந்த போதிலும், முன்னாள் ஜனாதிபதி அங்கு சென்றமை பற்றிய தகவல் வெளியானதையடுத்து விமானம் பெங்கொக்கில் உள்ள இராணுவ விமான நிலையத்திற்கு திருப்பி விடப்பட்டது.

கோட்டாபய ராஜபக்ஷ தங்கியிருக்கும் ஹோட்டலின் பெயர் பாதுகாப்பு காரணங்களுக்காக வெளியிடப்படவில்லை எனவும், அவரது பாதுகாப்பிற்காக சிவில் உடையில் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் ஹோட்டலில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தாய்லாந்தில் 90 நாட்கள் தங்கியிருந்து பின்னர் எதிர்வரும் நவம்பர் மாதம் நாடு திரும்புவார் என தெரிவிக்கப்படுகிறது.

Latest news

16 வயதுக்குட்பட்டவர்களின் 50,000 சமூக ஊடகக் கணக்குகளை நீக்குவதாக அரசாங்கம் உறுதி

16 வயதுக்குட்பட்ட குழந்தைகள் மீதான சமூக ஊடகத் தடையின் முதல் வாரத்தில் 4.7 மில்லியன் சமூக ஊடகக் கணக்குகள் நீக்கப்பட்டதாக தகவல் தொடர்பு அமைச்சர் அன்னிகா...

வெனிசுலாவின் விடுதலைக்காக டிரம்பிற்கு அமைதிக்கான நோபல் பரிசு

வெனிசுலா எதிர்க்கட்சித் தலைவர் மரியா கொரினா மச்சாடோ, வாஷிங்டனில் உள்ள வெள்ளை மாளிகையில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்புடன் ரகசிய சந்திப்பு நடத்தியுள்ளார். இந்த சந்திப்பின் போது...

விக்டோரியாவில் மனித உடல் பாகங்கள் கண்டுபிடிப்பு

விக்டோரியாவில் உள்ள Phillip தீவில் மனித எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. Silverleaves-இன் Hazelwood Ct பகுதியில் உள்ள ஒரு நிலத்தில் கட்டுமானப் பணியின் போது இந்த மனித உடல்...

விக்டோரியா காட்டுத்தீயில் 228 வீடுகள் எரிந்து நாசம்

கடந்த வாரத்தில் விக்டோரியாவில் ஏற்பட்ட காட்டுத்தீயில் 228 வீடுகள் உட்பட 700 கட்டிடங்களும், 400,000 ஹெக்டேர்களுக்கும் அதிகமான நிலங்களும் நாசமாகியுள்ளன. ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால்...

விக்டோரியா காட்டுத்தீயில் 228 வீடுகள் எரிந்து நாசம்

கடந்த வாரத்தில் விக்டோரியாவில் ஏற்பட்ட காட்டுத்தீயில் 228 வீடுகள் உட்பட 700 கட்டிடங்களும், 400,000 ஹெக்டேர்களுக்கும் அதிகமான நிலங்களும் நாசமாகியுள்ளன. ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால்...

மெல்பேர்ணில் மூடப்படும் Fletcher Jones Clothing

ஆஸ்திரேலியாவின் பிரபல ஆடை பிராண்டான Fletcher Jones, அதன் அனைத்து சில்லறை கிளைகளையும் ஆன்லைன் வணிகங்களையும் மூடுவதாக அறிவித்துள்ளது. தேசிய அளவில் சில்லறை வர்த்தகத்தில் ஏற்பட்டுள்ள நெருக்கடி...