சர்வதேச ​விண்வெளி மையத்தில் இந்திய தேசியக்கொடி

0
299

நாட்டின் 75-ஆவது சுதந்திர தினத்தை கொண்டாடும் இந்தியர்களுக்கு வாழ்த்து தெரிவிக்கும் விதமாக, சர்வதேச விண்வெளி மையத்தில் இந்திய தேசியக் கொடி ஏற்றப்பட்டுள்ளது. அந்தப் புகைப்படத்தை, அமெரிக்காவில் உள்ள நாசா விண்வெளி ஆய்வு மையத்தில் பணிபுரியும் இந்திய அமெரிக்க விஞ்ஞானி ராஜா சாரி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், இந்தியர்கள் அனைவருக்கும் சுதந்திர தின வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். தனது பூர்விக ஊரான ஹைதராபாத் நகரம், வண்ண விளக்குகளால் ஒளிரும் புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளார்.

Previous articleதமிழ் அமைப்புகள் மீதான தடையை நீக்கியது இலங்கை
Next articleசுதந்திர தினத்தை முன்னிட்டு இந்தியா வழங்கிய இலவச சைக்கிளில் சவாரி செய்த மடகாஸ்கர் பிரதமர்