தமிழ் அமைப்புகள் மீதான தடையை நீக்கியது இலங்கை

0
420

இனப் பிரச்சினை காரணமாக இலங்கையை விட்டு பெருமளவில் வெளியேறிய தமிழர்கள் பல்வேறு நாடுகளில் வாழ்ந்துவருகிறார்கள். பல அமைப்புகளையும் அவர்கள் தொடங்கி நடத்தி வருகிறார்கள். இந்த அமைப்புகளுக்கு இலங்கை அரசு தடை விதித்திருந்தது. பொருளாதார நெருக்கடியால் தடுமாறும் இலங்கை, வெளிநாடுகளில் வாழும் இலங்கை மக்கள், சொந்த நாட்டின் அன்னியச் செலாவணி இருப்புக்கு உதவ வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளது. இந்நிலையில், ஆஸ்திரேலிய தமிழ் காங்கிரஸ், உலக தமிழ் அமைப்பு, உலக தமிழ் ஒருங்கிணைப்பு குழு, தமிழ் ஈழ மக்கள் பேரவை, கனடா தமிழ் காங்கிரஸ், பிரிட்டீஷ் தமிழ் அமைப்பு ஆகிய 6 வெளிநாடுவாழ் தமிழ் அமைப்புகளுக்கான தடையை இலங்கை அரசு நீக்கியுள்ளது. மேலும் 316 தனிநபர்கள் மீதான தடையும் நீக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பான அறிவிப்பை இலங்கை பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ளது. வெளிநாடுகளில் உள்ள தமிழ் மக்களிடம் உதவியை எதிர்பார்த்து வெளிநாடுவாழ் தமிழர் அமைப்புகள் மீதான தடை நீக்கப்பட்டுள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

Previous articleபாகிஸ்தானுடன் போர் பயிற்சியா? – இலங்கை கடற்படை மறுப்பு
Next articleசர்வதேச ​விண்வெளி மையத்தில் இந்திய தேசியக்கொடி