ஆஸ்திரேலியாவில் அதிக கார் திருட்டுகள் நடக்கும் நகரமாக குயின்ஸ்லாந்து மாநிலத்தின் பிரிஸ்பேன் நகரம் மாறியுள்ளது.
சமீபத்திய அறிக்கையின்படி, கடந்த 2021 ஆம் ஆண்டில், 15,800 க்கும் மேற்பட்ட கார் திருட்டுகள் அங்கு பதிவாகியுள்ளன.
15,353 கார் திருட்டுகளுடன் மெல்போர்ன் இரண்டாவது இடத்தில் உள்ளது. 10,473 கார் திருட்டு சம்பவங்கள் பதிவாகியுள்ள சிட்னி நகரம் 03வது இடத்தைப் பெற்றுள்ளது.
டாஸ்மேனியாவில் கடந்த ஆண்டு திருடப்பட்ட கார்களின் எண்ணிக்கை குறைவாக இருந்தது.
எவ்வாறாயினும், 1000 வாகனங்களுக்கான திருட்டுகளின் எண்ணிக்கையின் அடிப்படையில், வடக்கு பிரதேசம் அதிக விகிதத்தைக் காட்டியுள்ளது.
