திரையரங்குகளில் 75 நாட்களைக் கடந்த விக்ரம்

0
374

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கிய ‘விக்ரம்’ திரைப்படம் கடந்த ஜூன் 3-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இப்படத்தில் கமல்ஹாசன், விஜய் சேதுபதி, ஃபகத் பாசில் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர். இவர்களுடன் சூர்யா, அர்ஜுன் தாஸ், நரேன், காளிதாஸ் ஜெயராம் ஆகியோர் முக்கியமான துணை வேடங்களில் காணப்பட்டனர். இப்படம் நான்கு வெவ்வேறு மொழிகளில் வெளியாகியது.படம் வெளியாகி ரசிகர்களிடமும், சினிமா ரசிகர்களிடமும் நல்ல வரவேற்பையும் விமர்சனங்களையும் பெற்றது. நீண்ட நாட்களுக்குப் பிறகு தனது படம் மாபெரும் வெற்றி பெற்றதால் மிகுந்த உற்சாகமடைந்தார் கமல் ஹாசன். அதோடு விக்ரம் திரைப்படம் 450 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்து பாக்ஸ் ஆபிஸில் வெற்றி பெற்றது.

கடந்த ஜூலை 8-ம் தேதி டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியான விக்ரம் திரைப்படம், திரையரங்குகளில் இன்றோடு 75 நாட்களைக் கடந்திருக்கிறது. இதனை விஜய் சேதுபதி தனது ட்விட்டரில் அறிவித்துள்ளார்.தற்போதைய காலகட்டத்தில் பெரும்பாலான திரைப்படங்கள் 10 நாட்கள் திரையரங்கில் நீடிப்பதே பெரிய விஷயம். இந்நிலையில், 75 நாட்களைக் கடந்த விக்ரம் திரைப்படம், படக்குழுவினருக்கு எல்லையற்ற மகிழ்ச்சியைக் கொடுத்துள்ளது.

Previous articleமியான்மர்: ஊழல் வழக்கில் ஆங் சான் சூகிக்கு 6 ஆண்டுகள் சிறை
Next articleசீன அதிகாரிகளின் செயலால் அலறியடித்து ஓடிய மக்கள்