பொருளாதார நெருக்கடியை சமாளிக்க இலங்கைக்கு 25 மில்லியன் டொலர்களை மேலதிக நிதியுதவி வழங்குவதற்கு ஆஸ்திரேலியா அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
கடந்த ஜூன் மாதம், ஆஸ்திரேலியா இலங்கைக்கு 50 மில்லியன் டொலர் நிதி நிவாரணம் வழங்கியது.
இதன்படி, பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள்வதற்கு ஆஸ்திரேலியா இலங்கைக்கு 03 மாதங்களுக்குள் வழங்கிய மொத்தத் தொகை 75 மில்லியன் டொலர்களாகும்.
உணவு மற்றும் சுகாதார வசதிகளை மேம்படுத்த இந்த தொகையை வழங்க அந்தோணி அல்பானீஸ் அரசு திட்டமிட்டுள்ளது.
இக்கட்டான கட்டத்தை சந்தித்து வரும் இலங்கைக்கு தேவைப்படும் போது உதவ தயாராக இருப்பதாக ஆஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சர் பென்னி வோங் தெரிவித்துள்ளார்.