ஆஸ்திரேலிய பல்கலைக்கழகங்களில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கையை அடுத்த 02 வருடங்களுக்கு 20,000 ஆக அதிகரிக்க மத்திய அரசாங்கம் அனுமதித்துள்ளது.
குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்கள் / பழங்குடியினர் மற்றும் தொலைதூரப் பகுதிகளைச் சேர்ந்த மாணவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
வருடத்திற்கு 10,000 மாணவர்களின் மேலதிக கோட்டாவானது 02 வருடங்களில் சேர்த்துக்கொள்ளப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக கல்வி அமைச்சர் ஜேசன் கிளேர் தெரிவித்தார்.
கல்வி-சுகாதாரம்-பொறியியல் மற்றும் தொழில்நுட்பம் போன்ற துறைகளில் இருந்து தற்போது ஆஸ்திரேலியாவில் நிலவும் திறன்மிக்க தொழிலாளர்களின் கடுமையான பற்றாக்குறையை போக்குவதே இதன் நீண்டகால இலக்காகும் என கல்வி அமைச்சர் தெரிவித்தார்.
அனைத்து மக்களுக்கும் சமமான கல்வி வாய்ப்பை வழங்குவதே தொழிலாளர் கட்சி அரசாங்கத்தின் நோக்கம் என கல்வி அமைச்சர் தெரிவித்தார்.