10-க்கும் மேற்பட்ட குழந்தைகளை பெற்றால் ரூ 13. லட்சம் பரிசு – ரஷியா அறிவிப்பு

0
339

மக்கள் தொகை சரிவை எதிர்கொள்ள, 10க்கும் மேற்பட்ட குழந்தைகளை பெற்றால் ரூ.13 லட்சம் பரிசுத்தொகையை ரஷ்ய அதிபர் புடின் அறிவித்துள்ளார்.இது குறித்து ரஷிய அதிபர் புதின் கூறியிருப்பதாவது: ரஷியாவில் மக்கள் தொகை தொடர்ந்து சரிவு ஏற்பட்டு வருகிறது. இதை எதிர்கொள்ள, 10க்கும் மேற்பட்ட குழந்தைகளை பெற்றெடுக்கும் ரஷிய பெண்களுக்கு 13 லட்சம் ரூபாய் பரிசுத்தொகை வழங்கப்படும். தங்களின் 10-வது குழந்தைக்கு ஒரு வயது நிறைந்தவுடன், குழந்தையின் தாயிடம் வழங்கப்படும். மேற்பட்ட குழந்தைகளைப் பெற்ற பெண்களுக்கான சோவியத் சகாப்த விருது (தாய் நாயகி) என்று அழைக்கப்படுகிறது. இது உக்ரைனில் நடந்த போரினால் மரணமடைந்துள்ள ரஷ்யாவின் மக்கள் தொகை நெருக்கடியை மீட்டெடுப்பதற்கான முயற்சியாகும் என கூறினார்.

Previous articleமகன்களை தனியாக விட்டுவிட்டு நடிகையுடன் ஓட்டம் பிடித்த நடிகர் தனுஷ்
Next articleஒரே நாளில் 2 ஏவுகணைகளை சோதித்து வடகொரியா அடாவடி