நிலக்கரி – எரிபொருள் மற்றும் எரிவாயுவை ஊக்குவிக்கும் விளம்பரங்களை தடை செய்ய சிட்னி நகர சபை முடிவு செய்துள்ளது.
இதன்படி, கட்டிடங்களைப் பயன்படுத்தியும், பொது இடங்களில் காட்சிப்படுத்தப்படும் இதுபோன்ற விளம்பரப் பலகைகளை தடை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு, சிட்னி நகர சபை ஆஸ்திரேலியாவில் புதைபடிவ எரிபொருட்களை ஊக்குவிக்கும் விளம்பரங்களை தடை செய்த முதல் நகர சபை ஆகும்.
பொதுமக்களின் ஆரோக்கியத்தை கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
புகை பிடிப்பதால் ஏற்படும் உயிரிழப்பை விட, காற்று மாசுபாட்டால் உலகம் முழுவதும் ஆண்டுக்கு 87 லட்சம் பேர் இறக்கின்றனர்.