இந்தியாவின் மகாராஷ்டிரா தலைநகர் மும்பையில் கடந்த 2008ஆம் ஆண்டு பாகிஸ்தான் தீவிரவாதிகள் கடல் வழியாக இந்திய எல்லைக்குள் ஊடுருவி தாக்குதல் நடத்தினர். இந்த தீவிரவாத தாக்குதலில் 250க்கும் மேற்பட்ட பொதுமக்கள், காவல்துறையினர் மற்றும் வெளிநாட்டினர் கொல்லப்பட்டனர், மேலும் 700க்கும் மேற்பட்டவர்கள் படுகாயமடைந்தனர்.
இந்நிலையில் மும்பைக்கு 190 கி.மீ தொலைவில் உள்ள ராய்கட் பகுதியில் படகு ஒன்று கரை ஒதுங்கியது. அந்த படகை ஆய்வு செய்ததில் 3 ஏ.கே 47 ரக துப்பாக்கிகளும் தோட்டாக்களும் கண்டெடுக்கப்பட்டன. இதனையடுத்து படகு கைபற்றப்பட்டு தீவிர விசாரணை மேற்கொண்டதில் அந்த படகு ஆஸ்திரேலியா நாட்டு பெண் ஒருவருக்கு சொந்தமானது எனவும் கடந்த ஜூன் மாதம் விபத்தில் சிக்கயபோது நடுக்கடலில் கைவிடப்பட்டது எனவும் தெரியவந்தது. மேலும் அதில் அவர்கள் தற்காப்புக்காக வைத்திருந்த துப்பாக்கிகள் கரை ஒதுங்கியது.
இந்நிலையில் மும்பை போக்குவரத்து காவல்துறையில் வாட்ஸ் அப் எண்ணிற்கு 6 பேர் கொண்ட தீவிரவாத கும்பல் இந்தியாவில் தாக்குதல் நடத்துவார்கள் என தகவல் வந்தது. இது தொடர்பாக மும்பை தீவிரவாத தடுப்புக் குழு மற்றும் மத்திய புலனாய்வு அமைப்புகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.