Breaking Newsஅடுத்த வாரம் நாடு திரும்பும் கோட்டாவிற்கு பாராளுமன்ற உறுப்பினர் பதவி?

அடுத்த வாரம் நாடு திரும்பும் கோட்டாவிற்கு பாராளுமன்ற உறுப்பினர் பதவி?

-

கோட்டா கம் ஹோம் பிரசாரம் முன்னெடுப்பு தாய்லாந்தில் தங்கியுள்ள முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச அடுத்த வாரம் இலங்கை திரும்பவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த நிலையில், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினராக கோட்டாபய ராஜபக்ச நியமிக்கப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அவரது பாதுகாப்பு மற்றும் சட்ட விவகாரங்கள் மற்றும் வெளிநாட்டு பயணங்களில் தேவையான இராஜதந்திர உதவி பெற்றுக்கொள்ளும் வகையில் அவருக்கு பாராளுமன்ற உறுப்பினர் பதவி வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கோட்டாபய ராஜபக்ச பாராளுமன்றத்திற்கு வருவதற்காக பொதுஜன முன்னணியின் தேசிய பட்டியல் பாராளுமன்ற உறுப்பினரான விசேட வைத்திய நிபுணர் கலாநிதி சீதா அரம்பேபொல இராஜினாமா செய்யவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதே நேரம் கோட்டாபய ராஜபக்சவை வரவேற்க மொட்டு கட்சியால் கோட்டா கம் ஹோம் சமூக ஊடக பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டு வருவதும் குறிப்பிடதக்கது.

Latest news

காசாவில் கொல்லப்பட்ட பத்திரிகையாளர் குறித்து இஸ்ரேலின் அறிக்கை

கடந்த சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் இஸ்ரேலிய வான்வழித் தாக்குதல்களில் கொல்லப்பட்ட பத்திரிகையாளர்களின் இறுதிச் சடங்குகளில் காசா நகரில் நூற்றுக்கணக்கான பாலஸ்தீனியர்கள் கலந்து கொண்டனர். இஸ்ரேலிய வான்வழித் தாக்குதல்களில்...

இன்று காலை விக்டோரியாவில் ஏற்பட்ட நிலநடுக்கம்

மெல்பேர்ணின் தென்கிழக்கே விக்டோரியாவில் உள்ள மார்னிங்டன் தீபகற்பத்தில் இன்று அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டது. அதிகாலை 4.39 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக அரசாங்கத்தின் புவியியல் வலைத்தளம் கூறுகிறது. இது ரிக்டர்...

மிகவும் திருப்தியான வாடிக்கையாளர் விருதை வென்ற சூப்பர் மார்க்கெட்

ஆஸ்திரேலியாவின் விருப்பமான பல்பொருள் அங்காடியாக Aldi மீண்டும் ஒருமுறை வாடிக்கையாளர்களால் மகுடம் சூட்டப்பட்டுள்ளது. Aldi தொடர்ந்து எட்டாவது முறையாக இந்த விருதை வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. பல்வேறு முக்கிய...

ஒரு பெரிய ஆஸ்திரேலிய வங்கியிடமிருந்து சாதனை லாபம்

ஆஸ்திரேலியாவின் மிகப்பெரிய கடன் மற்றும் வைப்பு நிறுவனமான Commonwealth வங்கி, 2024/25 நிதியாண்டில் ஆண்டுக்கு $10.25 பில்லியன் லாபம் ஈட்டியுள்ளது. கடந்த ஆண்டு வீட்டு உரிமையாளர்கள் மற்றும்...

விக்டோரியாவில் கார் மீது மோதியதில் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் உயிரிழப்பு

விக்டோரியாவின் கிழக்குப் பகுதியில் மோட்டார் சைக்கிள் காருடன் மோதியதில் ஒருவர் உயிரிழந்தார். புதன்கிழமை மாலை 6 மணியளவில் Moe-இல் உள்ள Lloyd தெருவிற்கு அவசர சேவைகள் அழைக்கப்பட்டன. இன்னும்...

வாகன நிறுத்துமிடத்தில் சிறப்பாகச் செயல்பட்ட முன்னாள் பிரதமர்

முன்னாள் பிரதமர் Tony Abbott வாகன நிறுத்துமிடத்தில் பயணிகளுக்கு உதவும் காணொளி சமூக ஊடகங்களில் பரவி வருகிறது. அவர் 10 ஆண்டுகளுக்கு முன்பு ஆஸ்திரேலியாவின் பிரதமராக இருந்தார்....