Newsநியூ சவுத் வேல்ஸ் பாடசாலைகளில் அமுலுக்கு வரவள்ள தடை

நியூ சவுத் வேல்ஸ் பாடசாலைகளில் அமுலுக்கு வரவள்ள தடை

-

ஆஸ்திரேலியாவில் மக்கள்தொகை ஆக அதிகம் உள்ள மாநிலமான நியூ சவுத் வேல்ஸில் பாடசாலைகளில் கைப்பேசிகளைத் தடை செய்ய கோரிக்கை எழுப்பப்பட்டுள்ளது.

அம்மாநிலத்தில் உள்ள தொடக்க பாடசாலைகளில் பயிலும் ஏறத்தாழ 12 வயது மாணவர்கள் பாடசாலைகளில் இருக்கும்போது கைப்பேசிகளைப் பயன்படுத்த முடியாது எனச் சில பாடசாலைகள் அறிவித்தன.

கைப்பேசி பயன்பாட்டைச் சில பாடசாலைகள் கட்டுப்படுத்தின. இந்த அணுகுமுறை பலன்
தந்திருப்பதாக அப் பாடசாலைகள் தெரிவித்தன.

மாணவர்கள் கல்வியில் கவனம் செலுத்துவதாகவும் தேர்வு முடிவுகள் மேம்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. அதுமட்டுமல்லாது, ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் இடையிலான தொடர்பு வலுவடைந்திருப்பதாக நியூ சவுத் வேல்ஸ் கல்வி அதிகாரிகள் கூறினர்.

இதனால் இந்த அணுகுமுறையை அனைத்து மாணவர்களுக்கும் விரிவாக்கம் செய்ய வேண்டும் என்று பலர் குரல் எழுப்பியுள்ளனர்.

சிட்னியில் உள்ள டேவிட்சன் உயர்நிலைப்பள்ளி 12 வயதிலிருந்து 16 வயது வரையிலான மாணவர்களுக்கு இவ்வாண்டு தொடக்கத்தில் கைப்பேசிக்கு தடை விதித்தது.

அதன்படி, மாணவர்கள் தங்கள் கைப்பேசிகளைப் பாடசாலைகளுக்கு கொண்டு செல்லலாம். ஆனால் அவற்றை தங்களுக்கென ஒதுக்கப்பட்ட பாதுகாப்புப் பெட்டிகளில் பூட்டி வைத்திவிட வேண்டும்.

கைப்பேசித் தடை காரணமாக மாணவர்களிடையிலான தொடர்பு, பேச்சு அதிகரித்திருப்பதாக பாடசாலைகளின் தலைமையாசிரியர் டேவிட் ரூல் மகிழ்ச்சி தெரிவித்தார்.

“கவனச் சிதறலைக் குறைக்கும் அணுகுமுறைகள் பாடசாலைகளின் ஊழியர்களுக்கும் மாணவர்களுக்கும் பலனைத் தருகின்றன. கைப்பேசி இல்லாததால் பிறருடன் பேசும் பழக்கம் அதிகரித்துள்ளது. மேலும் மாணவர்கள் பலர் விளையாட்டுகளில் ஈடுபடுகின்றனர். இதனால் மகிழ்ச்சி அடைகிறோம்,” என்று ரூல் கூறினார். பாடசாலைகளில் கைப்பேசித் தடைக்குப் பெற் றோரிடமிருந்து நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

Latest news

பிரித்தானியாவின் உயரிய ‘நைட்’ பட்டம் பெற்றார் ஈழத்தமிழர்

பிரித்தானியாவின் லெய்செஸ்டர் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராகப் பணியாற்றி வரும், இலங்கையைப் பிறப்பிடமாகக் கொண்ட பேராசிரியர் நிஷான் கனகராஜா பிரித்தானிய மன்னரின் 2026-ஆம் ஆண்டிற்கான புத்தாண்டு கௌரவப் பட்டியலில்...

மெக்சிகோவில் பயணிகள் ரயில் தடம் புரள்வு – 13 பேர் பலி

தெற்கு மெக்சிகோவில் பயணிகள் ரயில் தடம் புரண்டதில் குறைந்தது 13 பேர் இறந்துள்ளனர் மற்றும் கிட்டத்தட்ட 100 பேர் காயமடைந்துள்ளனர் என்று வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. ஓக்ஸாகா...

சீனாவில் குழந்தைகளின் வீட்டுப்பாடங்களை கண்காணிக்கும் AI

சீனாவில் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளின் வீட்டுப்பாடங்களைக் கண்காணிக்க செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவது அதிகரித்து வருவதாகக் கூறப்படுகிறது. ByteDance உருவாக்கிய AI சாட்பாட் "டோலா", குழந்தைகளின் நடத்தையைக்...

மின்சாரக் கட்டணத்தைக் குறைப்பதற்கான வழியை வெளிப்படுத்தும் நுகர்வோர் ஆணையம்

கூடுதல் பணத்தை மிச்சப்படுத்த ஆஸ்திரேலியர்கள் எரிசக்தி சப்ளையர்களை மாற்றுமாறு எச்சரிக்கப்படுகிறார்கள். தேசியத் தலைவர் டேவிட் லிட்டில்பிரவுட், எரிசக்தி விலைகள் குறித்து கவனம் செலுத்தப்பட வேண்டும் என்றும், எரிசக்தி...

மெல்பேர்ணில் ஒரு இரவு விடுதிக்கு அருகில் கத்திக்குத்து தாக்குதல்

மெல்பேர்ணில் உள்ள ஒரு பிரபலமான இரவு விடுதிக்கு அருகில் 35 வயது நபர் ஒருவர் கத்தியால் குத்தப்பட்டுள்ளார். நேற்று இரவு சுமார் 10 மணியளவில் பிரஹ்ரானில் உள்ள...