மெல்போர்ன் விஞ்ஞானிகள் குழு புற்றுநோய் குறித்த புதிய ஆய்வைத் தொடங்கியுள்ளனர்.
அதற்கமைய, DNA தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி மரபணு செயல்பாடு குறித்த உலகின் முதல் புற்றுநோய் பரிசோதனையை நடைமுறைப்படுத்தியுள்ளனர்.
புற்றுநோயை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்தால் ஆயிரக்கணக்கான உயிர்களைக் காப்பாற்ற முடியும் என மெல்போர்ன் விஞ்ஞானிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
மோனாஷ் பல்கலைக்கழகத்தில் நடத்தப்பட்ட இந்த ஆராய்ச்சியில் கிட்டத்தட்ட 10,000 பேர் பங்கேற்றுள்ளனர்.
அவர்களில் 75 பேரில் ஒருவர் இந்த சோதனையில் புற்றுநோயாளிகளாக கண்டறியப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.