இந்த ஆண்டு பல்வேறு மோசடிகளில் சிக்கி ஆஸ்திரேலியர்கள் 441 மில்லியன் டொலர்களுக்கு மேல் இழந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
கடந்த ஆண்டு இதுபோன்ற மோசடிகளின் மதிப்பு 2 பில்லியன் டொலர்கள் என்று ScamWatch க்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொலைபேசி அழைப்புகள் மற்றும் குறுஞ்செய்தி மோசடிகள் ஆஸ்திரேலியர்களை ஏமாற்றும் முக்கிய வழிகளாக அடையாளம் காணப்பட்டுள்ளன.
மோசடிகளைத் தடுக்க ஆஸ்திரேலியா டிசம்பர் 2020 ஆம் ஆண்டு புதிய சட்டங்களை அறிமுகப்படுத்தியது.
அதன் படி, இதுவரை சுமார் 660 மில்லியன் மோசடி அழைப்புகள் தடுக்கப்பட்டுள்ளன.