இலங்கைக்கு வருகை தந்துள்ள சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் சற்று முன்னர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்தனர்.
இலங்கை எதிர்கொள்ளும் நிதி நெருக்கடியின் தற்போதைய நிலைமை குறித்து இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளது.
அத்துடன், எதிர்வரும் 26ஆம் திகதி இந்த கலந்துரையாடல் சுற்றில் மற்றுமொரு கலந்துரையாடலை நடத்தவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, தொழில்நுட்ப மட்ட விடயங்கள் தொடர்பில் மத்திய வங்கி அதிகாரிகளுடன் எதிர்காலத்தில் கலந்துரையாடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
இந்த சந்திப்பில் சர்வதேச நாணய நிதியத்தின் கலந்துரையாடல் சபையின் தலைவர் பீட்டர் புரூபர், பிரதித் தலைவர் ஒசைரோ கொசைகோ, சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கைக்கான நிரந்தரப் பிரதிநிதி டுபெகன்ஸ், ஜனாதிபதி அலுவலக தலைமை அதிகாரி சாகல ரத்நாயக்க, ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏகநாயக்க, மத்திய வங்கி ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க ஆகியோர் கலந்துகொண்டுள்ளார்.