குயின்ஸ்லாந்தில் கோவிட் தடுப்பூசியைப் பெறாத 900 கல்வி ஊழியர்களுக்கான கொடுப்பனவுகளை இடைநிறுத்த மாநிலக் கல்வித் துறை முடிவு செய்துள்ளது.
இதில் ஆசிரியர்கள் – கல்விசாரா ஊழியர்கள் – நிர்வாக ஊழியர்கள் – துப்புரவுப் பணியாளர்கள் உள்ளிட்ட தரப்பினரும் அடங்குவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
கடந்த நவம்பரில், குயின்ஸ்லாந்து கல்வி ஊழியர்களுக்கு கோவிட் தடுப்பூசியை கட்டாயமாக்கும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இதை மீறும் ஆசிரியர்கள் உட்பட கல்வித்துறை ஊழியர்களுக்கு, அவர்களுக்கு வழங்க வேண்டிய 20 வார உதவித்தொகை குறைக்கப்படும் என, நேற்று கடிதம் அனுப்பப்பட்டது.
இருப்பினும், குயின்ஸ்லாந்தில் உள்ள 54,000 ஆசிரியர்களில் 99 சதவீதம் பேர் மட்டுமே தடுப்பூசி இலக்குகளை அடைந்துள்ளனர்.