மேற்கு ஆஸ்திரேலியாவில் வீடற்ற மக்களுக்கு எதிரான வன்முறைகள் அதிகரித்துள்ளதாக சமீபத்திய அறிக்கை வெளிப்படுத்துகிறது.
கடந்த 2 ஆண்டுகளில் 86 சதவீத பெண்களும், 50 சதவீத ஆண்களும் ஒருவிதமான தாக்குதலுக்கு ஆளாகியுள்ளனர் என்பதை இது காட்டுகிறது.
மேற்கு ஆஸ்திரேலியா பல்கலைக்கழகம் 10 ஆண்டுகளாக நடத்திய ஆய்வின் தரவுகளை பகுப்பாய்வு செய்வதன் மூலம் இந்தத் தகவல் தெரியவந்துள்ளது.
குடும்ப வன்முறையால் கணிசமான எண்ணிக்கையிலான பெண்கள் வீடுகளை இழந்துள்ளனர் என்பதும் தெரியவந்துள்ளது.
நகர்ப்புறங்களை விட பிராந்திய பகுதிகளில் இந்த தாக்குதல்கள் அதிகரித்துள்ளமையும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.