Newsஆஸதிரேலியாவில் 100வது பிறந்தநாளில் கைது செய்யப்பட்ட பெண்மணி - நெகிழ வைத்த...

ஆஸதிரேலியாவில் 100வது பிறந்தநாளில் கைது செய்யப்பட்ட பெண்மணி – நெகிழ வைத்த பொலிஸார்

-

ஆஸதிரேலியாவில் 100வது பிறந்தநாளில் கைது செய்யப்பட்ட பெண்மணி ஒருவர் தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது.

என் வாழ்க்கையில் பொலிஸ் நிலையத்தின் வாசலை மிதித்ததே இல்லை,’ என்பது பலருக்குப் பெருமிதம் கொள்வதற்கான ஓர் அம்சமாக இதுவாகும்.

ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த 100 வயது ஜீன் பிக்டன் (Jean Bicketon) என்ற மூதாட்டிக்கு என்றாவது ஒரு நாள் கைதுசெய்யப்பட வேண்டும் என்ற ஆசை!

அவரது பிறந்தநாளில் ஆசையை நிறைவேற்ற உதவியது விக்டோரியா மாநிலத்தின் பொலிஸார்.

அது குறித்து Facebook-இல் பதிவுசெய்யப்பட்டது. முதியோர் இல்லத்தில் பிக்டன் தமது பிறந்தநாளைக் கொண்டாடிக்கொண்டிருந்தபோது, திடீரென்று அபாய ஒலி கேட்டது.

சிவப்பு ஒளி வீசிக் கொண்டிருந்த பொலிஸார் காரிலிருந்து அதிகாரிகள் மூவர் இறங்கினர். ‘உங்களைக் கைதுசெய்கிறோம்,’ என்று கூறி அவர்கள் பிக்டனின் கைகளில் விலங்கை மாட்டினர்.

அதற்குச் சற்றும் எதிர்ப்புத் தெரிவிக்காத அவர் மகிழ்ச்சியுடன் கைதானார். பிக்டனின் ஆசையும் நிறைவேறியது. இந்த ஆசையையும் நிறைவேற்ற பொலிஸார் மேற்கொண்ட முயற்சி பலரையும் நெகிழ வைத்துள்ளது.

Latest news

ஆஸ்திரேலிய சந்தைக்கு வரும் ஒரு புதிய மின்சார கார்

இந்த ஆண்டு ஆஸ்திரேலிய சந்தையில் ஒரு புதிய மின்சார கார் வர உள்ளதாக கூறப்படுகிறது. பொதுமக்களால் மலிவு விலையில் வாங்கக்கூடிய Hatchback ரக கார்கள் சந்தைக்கு வர...

நீண்ட வார இறுதியில் விக்டோரியாவுக்குச் செல்வோருக்கான சிறப்பு அறிவிப்பு

வரவிருக்கும் நீண்ட வார இறுதியில் பயணம் செய்யத் திட்டமிடும் விக்டோரியர்களுக்கு அதிகாரிகள் சிறப்பு பாதுகாப்பு ஆலோசனைகளை வெளியிட்டுள்ளனர். மாநிலத்தின் பல பகுதிகளில் காட்டுத்தீ இன்னும் தீவிரமாக உள்ளது. காட்டுத்தீ...

மீண்டும் இயக்கப்படும் உலகின் மிகப் பெரிய அணுமின் நிலையம்

ஜப்பானில் உள்ள உலகின் மிகப் பெரிய அணுமின் நிலையம் மீண்டும் இயக்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜப்பான் நாட்டில் கடந்த 2011 ஆம் ஆண்டு ஏற்பட்ட நிலநடுக்கம் மற்றும் சுனாமியில்...

ஆஸ்திரேலிய தினத்தைக் கொண்டாட வருபவர்களுக்கான சிறப்பு அறிவிப்பு

வரும் 26 ஆம் திகதி வரும் ஆஸ்திரேலிய தினத்தை முன்னிட்டு, சிட்னி ஓபரா ஹவுஸ் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதியை பலத்த பாதுகாப்பு வளையத்துடன் மூட...

ஆஸ்திரேலிய தினத்தைக் கொண்டாட வருபவர்களுக்கான சிறப்பு அறிவிப்பு

வரும் 26 ஆம் திகதி வரும் ஆஸ்திரேலிய தினத்தை முன்னிட்டு, சிட்னி ஓபரா ஹவுஸ் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதியை பலத்த பாதுகாப்பு வளையத்துடன் மூட...

12 ஆண்டுகளுக்குப் பிறகு முடிவுக்கு வந்த சிட்னி Lockout சட்டங்கள்

சிட்னியின் இரவு நேர பொருளாதாரத்தை கடுமையாக பாதித்த Lockout சட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்ட 12வது ஆண்டு நிறைவையொட்டி, Minns தொழிற்கட்சி அரசாங்கம் அந்தச் சட்டங்கள் முற்றிலுமாக ரத்து...