2100 ஆம் ஆண்டில், ஆஸ்திரேலியாவின் பெரும்பாலான பகுதிகள் ஆண்டு முழுவதும் மிகவும் வெப்பமான காலநிலையை அனுபவிக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
இன்னும் 78 ஆண்டுகளில் உலகம் எந்த மாதிரியான காலநிலை மாற்றத்தை சந்திக்கும் என சமீபத்திய முன்னறிவிப்பு அறிக்கையில் இந்த தகவல் உள்ளது.
குறிப்பாக வடக்குப் பகுதி போன்ற மாநிலங்களில் அதிக வெப்பம் இருக்கும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
இதன்படி கடுமையான சூரிய ஒளியை தாங்க முடியாமல் உயிரிழக்க கூட நேரிடும் என இந்த சர்வேயில் தெரியவந்துள்ளது.
இதில் வயதானவர்கள் – இளம் குழந்தைகள் மற்றும் ஆபத்து குழுக்கள் அடங்கும். கரியமில வாயு வெளியேற்றம் அதிகரிப்பதே இதற்கு முக்கிய காரணம்.
2100 ஆம் ஆண்டுக்குள் உலக வெப்பநிலை 02 டிகிரி செல்சியஸ் அதிகரிக்கும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.