உக்ரேனில் உள்ள ஸப்போரிஸியா (Zaporizhzhia) அணுவாலை மீண்டும் செயல்படத் தொடங்கியுள்ளது. அங்குச் செயல்பட்ட மின்சாரக் கம்பிவடங்களில் கோளாறு ஏற்பட்டிருந்ததால் மின்சாரத் தடை உண்டாயிற்று.
ஐரோப்பாவின் ஆகப்பெரிய அணுவாலையான அதில் கதிர்வீச்சு வெளியாகும் ஆபத்தை உலகம் தவிர்த்துள்ளதாக உக்ரேனிய அதிபர் வொலோடிமிர் ஸெலென்ஸ்கி கூறினார்.
அணுவாலை தற்போது மின்கம்பி வடங்களுக்குப் பதிலாக டீசலில் இயங்கிக்கொண்டிருக்கிறது. ரஷ்யா அந்த அணுவாலையைக் கைப்பற்றியிருப்பதாக உக்ரேன் குற்றஞ்சாட்டுகிறது.
அங்கு ஆயுதங்கள் குவிக்கப்பட்டிருப்பதாகவும் ஆலையைச் சுற்றியுள்ள இடங்களிலிருந்து தாக்குதல்கள் நடத்தப்படுவதாகவும் உக்ரேன் கூறுகிறது. அதற்கு நேர்மாறாக, உக்ரேன்தான் அந்தப் பகுதியிலிருந்து பொறுப்பற்ற முறையில் துப்பாக்கிச் சூட்டுத் தாக்குதல்கள் நடத்துவதாக ரஷ்யா குற்றஞ்சாட்டியுள்ளது.
ஸப்பொரிஸியா அணுவாலையிலிருந்து ரஷ்யத் துருப்புகளை அகற்ற, அனைத்துலக அணுசக்தி ஆணையத்தின் உதவியை நாடியுள்ளது உக்ரேன்.