ஆஸ்திரேலியாவில் ஆண், பெண் இருபாலருக்கும் சமமான ஊதிய விகிதங்கள் கிடைக்கும் வகையில் சட்டத்தில் திருத்தம் செய்ய ஆண்டனி அல்பானீஸ் அரசாங்கம் தயாராகி வருகிறது.
முதியோர் பராமரிப்பு – குழந்தைப் பருவம் போன்ற பெண்கள் முக்கியத்துவம் வாய்ந்த துறைகளில் பெண்களுக்கு அதிக ஊதியம் அளிக்கும் சீர்திருத்தங்களை அறிமுகப்படுத்துவதே இதன் முதன்மை நோக்கமாகும்.
மேலும், முன்மொழியப்பட்ட திருத்தங்கள் மூலம், 250க்கும் மேற்பட்ட பணியாளர்களைக் கொண்ட நிறுவனங்களில் ஆண் மற்றும் பெண் ஊழியர்களின் சம்பளம் குறித்த தகவல்களை வெளியிடுவதை கட்டாயப்படுத்தும் அதிகாரங்கள் ஒப்படைக்கப்படும்.
ஆஸ்திரேலியாவில் சில துறைகளில் பாலின ஊதிய இடைவெளி 14 சதவீதம் அல்லது வாரத்திற்கு சுமார் $250 என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது மிகவும் நியாயமற்றது என்று பல சிவில் அமைப்புகள் குற்றம் சாட்டின.