Newsவெளிநாட்டு வாழ் இலங்கையர்களுக்கு முக்கிய எச்சரிக்கை

வெளிநாட்டு வாழ் இலங்கையர்களுக்கு முக்கிய எச்சரிக்கை

-

சட்ட விரோதமான முறையில் வெளிநாட்டு பண பரிமாற்றத்தில் ஈடுபடுகின்ற நபர்கள் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுப்பதற்காக சட்ட விரோத சொத்துக்கள் தொடர்பான விசாரணைப்பிரிவில் பிரத்தியேக குழுவொன்றை நியமிப்பதற்கு பொலிஸ்மா அதிபர் சி.டி.விக்கிரமரத்னவினால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மத்திய வங்கி ஆளுனர் கலாநிதி நந்தலால் வீரசிங்கவினால் விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு அமையவே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் பொலிஸ் ஊடகப்பிரிவு வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது :

நாட்டில் பொருளாதார நெருக்கடிகள் தீவிரமடைந்துள்ளமைக்கான பிரதான காரணம் டொலர் தட்டுப்பாடாகும் என்று மத்திய வங்கி மதிப்பிட்டுள்ளது. இதற்கான முக்கிய காரணிகள் தொடர்பிலும் மத்திய வங்கி வெளிப்படுத்தியுள்ளது.

அதற்கமைய சட்ட ரீதியான வங்கி முறைமைகளுக்கு அப்பால் உண்டியல் மற்றும் ஹவாலா முறைமை ஊடாக பணப்பறிமாற்றம் இடம்பெறுகின்றமை மற்றும் வெளிநாடுகளிலுள்ள இலங்கை பணியாளர்களினால் வெவ்வேறு அத்தியாவசிய மற்றும் அத்தியாவசியமற்ற பொருட்களை இறக்குமதி செய்வதற்காக வங்கி முறைமையின் ஊடாக அன்றி சட்டத்திற்கு முரணான முறைமைகளைக் கையாளுதல் என்பன பிரதான காரணிகளாக மத்திய வங்கியினால் அடையாளப்படுத்தப்பட்டுள்ளன.

மத்திய வங்கி ஆளுனரின் கோரிக்கைக்கு அமைய மேற்கூறப்பட்ட காரணிகள் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுப்பதற்காக பொலிஸ்மா அதிபரினால் சட்ட விரோத சொத்துக்கள் தொடர்பான விசாரணைப்பிரிவில் பிரத்தியேக குழுவொன்றை நியமித்து , குறித்த விசாரணை நடவடிக்கைகளை மேலும் பரந்தளவில் முன்னெடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இவை தவிர , சட்டத்திற்கு முரணான டொலர் பரிமாற்றத்தினை தடுப்பதற்காக 2006 இல 5 நாணய சுத்தீகரிப்பு சட்டத்தின் 3 மற்றும் 4 ஆம் உறுப்புரைகளில் டொலரைப் பெற்றுக் கொண்ட முறைமையை அறிந்து கொள்வதற்கான விசாரணைகளை முன்னெடுப்பதற்காக இலங்கை மத்திய வங்கி அதிகாரிகளுடன் ஒருங்கிணைந்து செயற்படுவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Latest news

விக்டோரியாவில் 50°C க்கு அருகில் வெப்பநிலை – 24 கிராமங்களுக்கு வெளியேற உத்தரவு

விக்டோரியாவில் இன்று வெப்பநிலை 49°C ஐ எட்டும் என எதிர்பார்க்கப்படுவதால், தீயணைப்பு வீரர்கள் மிகுந்த ஆபத்தை எதிர்கொள்வதாக அதிகாரிகள் எச்சரிக்கின்றனர். Otways பகுதியில் உள்ள 24க்கும் மேற்பட்ட...

ஆஸ்திரேலியாவில் நடந்த ஒரு ரகசிய பாதாள உலக உரையாடல் அம்பலம்

ஆஸ்திரேலியாவில் டெலிகிராமின் கீழ் இயங்கும் ஒரு குற்றவியல் வலையமைப்பின் வேர்கள் அம்பலப்படுத்தப்பட்டுள்ளன. தீ வைப்பு, கடத்தல் மற்றும் சித்திரவதை போன்ற குற்றங்களுக்கான பணக் கட்டணங்களைப் பட்டியலிடும் ஒரு...

எலோன் மஸ்க்கின் AI செயலி மீது ஐரோப்பிய ஒன்றியம் குற்றச்சாட்டு

எலோன் மஸ்க்கின் Grok AI செயலி குறித்து ஐரோப்பிய ஒன்றியம் (EU) அதிகாரப்பூர்வ விசாரணையைத் தொடங்கியுள்ளது. பெண்கள் மற்றும் குழந்தைகளின் ஒருமித்த கருத்து இல்லாத பாலியல் படங்களை...

ஆப்பிள் நிறுவனம் விடுத்துள்ள எச்சரிக்கை

உலகம் முழுவதும் உள்ள தனது பல கோடி வாடிக்கையாளர்களுக்கு ஆப்பிள் நிறுவனம் முக்கிய எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது. அதாவது பழைய Chrome, Chrome versions-ஆல் பாதுகாப்பு அபாயங்களை...

வெடிகுண்டு பயம் காரணமாக பெர்த் படையெடுப்பு தின பேரணி ரத்து

பெர்த்தில் நடந்த படையெடுப்பு தின எதிர்ப்பு பேரணியில் வீட்டில் தயாரிக்கப்பட்ட வெடிகுண்டை வீசியதாக 31 வயது நபர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. நேற்று மதியம் 12.30 மணியளவில்...

$246 போக்குவரத்து அபராதம் குறித்து அறிவிப்பு

ஞாயிற்றுக்கிழமை பள்ளி விடுமுறை முடிந்து பள்ளிகள் மீண்டும் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளதால், பள்ளிகளைச் சுற்றியுள்ள சாலைகளில் பள்ளி மண்டலங்கள் மீண்டும் நிறுவப்பட்டுள்ளன. அதன்படி, பள்ளி வலயங்களில் சாலைகளில் ஓட்டக்கூடிய...